இந்திய மகளீர் கிரிக்கெட் அணியானது வங்காளதேசத்திக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இந்த சுற்றுப்பயணத்தில் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளை இந்திய அணியானது விளையாடியது. இதில் முதலில் நடந்த டி20 தொடரில் இந்திய அணி 2 வெற்றிகளை பெற்று 2 -1 என்ற கணக்கில் வங்காள தேசத்தை வீழ்த்தியது. இதனையடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடந்தது.

இதில் முதல் ஒருநாள் போட்டியில் வங்காள அணியும், இரண்டவது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இந்நிலையில் மூன்றவது போட்டியானது டிராவானது. இந்நிலையில் இந்த போட்டியின்போது இந்தியா கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் விளையாடிய கொண்டிருக்க அவர் LBW காரணமாக ஆட்டமிழந்தார். ஆனால் அம்பயரின் இந்த முடிவால் கோபமடைந்த ஹர்மன்ப்ரீத் கவுர் சஸ்டெம்புகளை பேட்டினால் தாக்கினர்.
இதனால் இது குறித்த வீடியோ சோசியல் மீடியாவில் தீயை பரவியது. மேலும் இந்தியா கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுருவுக்கு 75 சதவிகிதம் போட்டி தொகையில் இருந்து தண்டனையாக பிடிக்கப்பட்டது. மேலும் பல முன்னாள் வீரர்களும், ஜாம்பவங்களும், பங்களாதேஷ் அணியின் கேப்டனும் இவர் செய்தது மிகவும் தவறான ஒரு எடுத்துக்காட்டு என்று விமர்சித்தனர்.
Harmanpreet Kaur was not happy with the decision 👀#HarmanpreetKaur #IndWvsBangW #INDvWI pic.twitter.com/ZyoQ3R3Thb
— Ajay Ahire (@Ajayahire_cric) July 22, 2023
மதம் லால் டிவிட் பதிவு :
மேலும் இந்த சம்பவம் குறித்து 1983ல் இந்தியாவிற்க்காக உலக அக்கோப்பையை பெற்று கொடுத்த வீரரான மதன் லால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் “வங்கதேச மகளிர் அணிக்கு எதிராக ஹர்மன்பிரீத்தின் நடத்தை பரிதாபமாக இருந்தது. அவர் கிரிக்கெட் விளையாட்டை விட பெரியவர் கிடையாது. அவர் இந்திய கிரிக்கெட்டுக்கு மிகவும் கெட்ட பெயரைப் பெற்று கொடுத்துள்ளார். இதனால் பிசிசிஐ இவரின் மீது மிகவும் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
Harmanpreet’s behaviour against the Bangladesh women’s team was pathetic. She is not bigger than the game. She got a very bad name for Indian cricket. BCCI should take very strict disciplinary action.
— Madan Lal (@MadanLal1983) July 23, 2023
இந்நிலையில் அந்த போட்டிக்கு பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் “விளையாட்டிலிருந்து நாங்கள் நிறைய கற்றுக்கொண்டோம் என்று நினைக்கிறேன். கிரிக்கெட்டைத் தவிர இந்த மாதிரியான அம்பயர்களை கண்டு நாங்கள் மிகவும் ஆச்சரியப்பட்டோம். அடுத்த முறை வங்கதேசம் வரும்போது இந்த மாதிரியான நடுவரைச் சமாளித்து அதற்கேற்ப நம்மைத் தயார்படுத்தது குறித்தும் சரியாக திட்டம் போட்டு வருவோம்.

வங்காளதேசம் நன்றாக பேட்டிங் செய்தனர், சூழ்நிலைக்கு ஏற்ப பேட்டிங் செய்தோம். நான் முன்பு குறிப்பிட்டது போல் நாங்கள் பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது சில மோசமான முடிவுகளை அம்பயர்கள் எடுத்ததாக் நான் நினைக்கிறேன். ஏனென்றால் அம்பயர்கள் அளித்த சில முடிவுகளால் நாங்கள் மிகவும் ஏமாற்றமாக இருந்தது என்று கூறினார் இந்திய மகளீர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத்.





