ஐபிஎல் கடந்த 2023ஆம் ஆண்டு தொடங்கி பிரமாதமாக நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று 9வது லீக் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரு பலம் வாய்ந்த அணிகள் மோதும் போட்டி நடைபெறுகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் இப்போட்டியில், முதலில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பந்துவீச தீர்மானித்தது.

தொடக்கத்தில் ஆர்சிபியின் அருமையான பந்துவீசினால் திணறிய கொல்கத்தா அணிக்கு மூன்றாவது ஓவரிலேயே தொடக்க ஆட்டக்காரர் வெங்கடேஷ் ஐயரின் விக்கெட் விழுந்தது. அந்த விக்கெட்டுக்கு பிறகே அடுத்த பந்தில் மன்தீப் சிங் ஆட்டமிழந்தார். இதனால் கொல்கத்தா அணிக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதனை தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா அணி கேப்டன் நிதிஷ் ராணா தன்னுடைய விக்கெட்டை இழந்தார்.
இப்படி வெறும் 6 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா அணிக்கு அதிர்ச்சிக்கு மேலே அதிர்ச்சியாக சிக்ஸர் நாயகன் ஆன்ட்ரே ரசலும் தன்னுடைய ஆட்டத்தை இழந்தார். இப்படி பல நட்சத்திர வீரர்கள் ஆட்டமிழந்த நிலையில் நம்பிக்கை நாயகனாக வந்தவர் தான் ஷர்துல் தாக்கூர். இவர் ஆன்ட்ரே ரசலுக்கு இணையாக அதிரடியாக விளையாடி வெறும் 20பந்துகளில் 51 ரன்கள் எடுத்து கலக்கினார். அதனை தொடர்ந்து அதிரடியாக ஆடிய ஷர்துல் தாக்கூர் 29 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார்.

இருப்பினும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர வீரர்களான வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா மற்றும் ஆண்ட்ரே ரஸ்ஸல் போன்ற பெரிய பெயர்கள் தோல்வியடைந்தன, அப்படிப்பட்ட நிலையில் தான் தொடக்க ஆட்டக்காரர் மந்தீப் சிங் ரோஹித் சர்மாவின் தேவையற்ற சாதனையை முறியடித்துள்ளார். மந்தீப் ஐபிஎல்லில் நீண்ட காலமாக விளையாடி வருகிறார், இதுவரை 110 போட்டிகளில் விளையாடி 1694 ரன்கள் குவித்துள்ளார், மேலும் 6 அரைசதங்கள் அடித்துள்ளார்.

ஆனால் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் மலிவாக அவுட் ஆனார் மற்றும் நான்கு பந்துகளில் இரண்டு ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதனை தொடர்ந்து நேற்று நடந்த ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் தொடக்கத்திலேயே RCB வேகப்பந்து வீச்சாளர் டேவிட் வில்லியால் ஆட்டமிழந்தார். இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா இதுவரையில் ஐபிஎல் தொடர்களில் 14 முறை ஒரு ரன் கூட எடுக்காமல் அவுட் ஆகியுள்ளார்.
Two in Two by David Willey!
— IndianPremierLeague (@IPL) April 6, 2023
A double wicket maiden by @david_willey 🔥🔥
Venkatesh Iyer and Mandeep Singh depart.
Live – https://t.co/V0OS7tFZTB #TATAIPL #KKRvRCB #IPL2023 pic.twitter.com/FjuJoHWzLH
அதனை போன்றுதான் தற்போது மன்தீப் சிங் ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்து 15வது முறையாக டக் அவுட்டாகியுள்ளார். இந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் கொல்கத்தாவிற்கு பிறகு ஆடிய ஆரசிப்பியின் நட்சத்திர வீரர்கள் வேகமாக ஆட்டமிழந்ததால் ஆர்சிபி 17.4 ஓவர்கள் முடிவில் மொத விக்கெட்டுகளையும் இழந்து 123 ரங்களுடன் தோல்வியை தழுவியது.





