இந்திய ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த உலக கோப்பை 2023 தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது, இந்த தொடர்நது முழுக்க முழுக்க இந்தியாவில் நடைபெறுவாதினால் கடந்த 2011 உலக கோப்பையை போலவே இந்த முறையும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையை வென்று கடந்த 10 ஆண்டுகளாக இந்தியா ஒரு ஐசிசி போட்டிகளில் கூட வெல்ல முடியாமல் இருக்கும் நிலைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் என்பது நம்பப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில் துரதிஷ்டவசமாக சுப்மன் கில் உடல்நிலை காரணமாக 2023உலக கோப்பை போட்டியில் இந்தியா விளையாடும் முதல் போட்டியான இந்தியா vs ஆஸ்திரேலியா போட்டியில் கலந்துகொள்ள வில்லை, இதனால் இஷான் கிஷான் தொடக்க வீரராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் சமீபத்தில் காயம் முடிந்து திரும்பிய கேஎல் ராகுல் மீண்டும் விக்கெட் கீப்பிங்கிற்கு திருத்தியுள்ளார்.

கே எல் ராகுலுக்கு ஐபிஎல் தொடரின் போது காலில் காயம் ஏற்பட்டது. இந்த காயம் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியில் கேஎல் ராகுல் கலந்து கொள்ளவில்லை, மேலும் அதற்கு பிறகு நடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் கலந்து கொள்ளாத நிலையில் அவருக்கு பதிலாக வந்த இஷான் கிஷான் மியாகவும் திறமையாக விளையாடி தன்னுடைய இடத்தை உலக கோப்பையில் தக்க வைத்து கொண்டார். அதே நேரத்தில் கேஎல் ராகுலும் உலக கோப்பை போட்டிக்கு தயாராகிவிட்டார்.
இந்நிலையில் இன்று நடக்கும் போட்டியில் கேஎல் தன்னுடைய திறனை நிரூபித்த ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நிலையில் தான் முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான மைக்கேல் கிளார்க் கேஎல் ராகுல் குறித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில் கே”எல் கீப்பிங் பார்வைக்கு வெளியே மேம்பட்டுள்ளது.

மறுநாள் இரவு அவர் பேட்டிங் செய்வதைப் பார்த்தேன். அவர் தனது சிறந்த நிலைக்குத் திரும்பியது போல் தெரிகிறது. தலைமை அவருக்கும் உதவுகிறது என்று நான் நினைக்கிறேன், அந்த கூடுதல் பொறுப்பை உணர்கிறீர்கள். எனவே, அவர் இந்த உலகக் கோப்பை பிரச்சாரத்தில் முழு நம்பிக்கையுடன் நடந்துகொள்கிறார், இது இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானது.
கே.எல். ராகுல் போன்ற ஒருவரைப் பற்றிய மற்றொரு விஷயம் – அவர் எங்கும் பேட் செய்ய முடியும். யாராவது காயம் அடைந்தால், அவர் பேட்டிங்கைத் திறக்கலாம். அவர் இப்படி பேட்டிங் செய்யும்போது சிறந்த முறையில் 140, 150 ரன்களில் அடிக்க முடியும். எனவே, அவர் ஃபார்மில் இருப்பது உண்மையில் இந்தியாவுக்கு உதவுகிறது, கூடுதல் சக்தியையும் கூடுதல் ஆழத்தையும் தருகிறது என்று நான் நினைக்கிறேன் என்று கூறினார் கிளார்க்.




