உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர் கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் இன்று 37 ஆவது போட்டியை கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இந்திய அணியும் தென்ஆப்பிரிக்கா அணியும் மோதின. இந்திய அணி இந்த உலக கோப்பை நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற முதல் இடத்தில் மட்டுமல்லாமல் அரை இறுதி சுற்று தகுதி வாய்ந்துள்ளது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து சிறப்பாக விளையாடிய இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 326 ரன்களை குவித்துள்ளது. மேலும் இந்த போட்டியில் விராட் கோலி தன்னுடைய 49 வது சதத்தை விளாசி கிரிக்கெட்டின் கடவுள் என்றழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்தார்.
இதனை தொடர்ந்து 327 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்க அணிக்கு பெரும் அதிர்ச்சியாக தொடக்கம் முதலே விக்கெட்டுகள் விழுந்தது. இந்தியாவின் அற்புதமான பந்துவீச்சின் காரணமாக 83 ரன்களுக்கு அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து தென்னாபிரிக்க அணி பெரும் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் ஜடேஜா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி பெரும் திருப்பு முனையாக செயல்பட்டார்.

இந்நிலையில் இந்த வெற்றியுடன் இந்திய அணியானது அதிகார பூர்வமாக இந்தியா அரையிறுதி போட்க்குள் நுழைந்து விட்டது. இருந்த போதிலும் அரையிறுதி போட்டியில் இந்தியாவுக்கு எதிராக எந்த அணி விளையாடும் என்பது இங்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் 8 அணிகளையும் வென்ற இந்தியா அரையிறுதி போட்டியில் அவர்களுக்கு எதிராக சுலபமாக வெல்ல இன்னும் கடுமையாக போராடும் என்பதினால் இறுதி போட்டிக்கு செல்வதும் இந்தியாவுக்கு
இந்நிலையில் பொதுவாக இந்தியாவிற்கு எதிராக கருத்துக்களை கூறி அதற்கு வாசிம் அக்ரம் போன்ற இந்திய வீரர்களிடம் வாங்கி கட்டிக்கொள்ளும் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான மைக்கேல் வாகன் கருத்து கூறியுள்ளார். மேலும் இந்தியா இந்த உலக கோப்பை தொடரில் ஆஸ்திரலிய அணியிடம் தோற்கும் என்றும். அப்படி தோற்றால் ஒரு பரிசு தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது “வாசிம் ஜாஃபர் எனது முதல் டெஸ்ட் விக்கெட். லார்ட்ஸ் மைதானத்தில் கெவின் பீட்டர்சனிடம் கேட்ச் ஆனார். அவர் சமூக ஊடகங்களில் இரண்டு முறை என்னைப் தாக்கியுள்ளார். ஆனால் உண்மையில் ஜாஃபர் தனது ட்விட்டர் கணக்கை நிர்வகிக்கவில்லை. இது ஒரு நிபுணரால் நடத்தப்படுகிறது. உலகக் கோப்பையில் இந்தியா தோற்கும் போது என்னிடம் பரிசு தயாராக உள்ளது. இந்திய அணியை ஆஸ்திரேலிய அணி வீழ்த்த முடியும் என நினைக்கிறேன் என்று கூறியுள்ளார் மைக்கேல் வாகன்.



