கிரிக்கெட் அறிமுகமான பிறகு சமீப காலமாக கிரிக்கெட் மீது உள்ள ஆர்வம் ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்தியா கிரிக்கெட் மீது ஆர்வமே இல்லாத இடங்களில் கூட தற்போது கிரிக்கெட் போட்டிகளானது அசுரர் வேகத்தில் வளர்ந்து வருகிறார். இதனால் அந்த நாட்டின் கிரிக்கெட் நிர்வாகங்களுக்கும் லீக் போட்டிகளை நடத்தி கிரிக்கெட்டை வளர்த்து வருகிறார். அந்த வகையில் தான் அமெரிக்காவில் மேஜர் கிரிக்கெட் லீக் போட்டியானது நடந்து வருகிறது.

இந்த போட்டியானது சில நாட்களுக்கு முன்னர் தான் தொடங்கியது. 6 அணிகள் விளையாடும் இந்த தொடரில் மொத்தமாக 15 போட்டிகள் மட்டுமே நடக்க இருக்கிறது. இந்த ஆறு அணிகளில் ஐபிஎல் போட்டியில் விளையாடிய சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி ஆகிய அணிகளும் மீதம் 2 அணிகளை அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களும் வாங்கியுள்ளது. மேலும் லே போட்டிகள் பல முடிந்த நிலையில் கடைசி லீக் போட்டியானது இன்று மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் மற்றும் சிட்டில் ஆர்கஸ் அணிக்கு எதிராக போட்டியானது நடைபெற்றது.
ஏற்கனவே வாஷிங்டன் ஃப்ரீடம் மற்றும் சீட்டில் ஆர்கஸ், டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய நிலையில் இந்த போட்டியானது மும்பை நியூயார் அணிக்கு மிகவும் முக்கியமான போட்டியாக இருந்தது. ஏனென்றால் ஒருவேளை இந்த போட்டியில் மும்பை வெற்றிபெறும் நிலையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் டெக்சாஸ் அணியை கீழே தள்ளி 2வது இடத்திற்கு செல்ல முடியும். இந்நிலையில் தான் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் மற்றும் சிட்டில் ஆர்கஸ் எதிரான போட்டியில் டாஸ் வென்ற சிட்டில் ஆர்கஸ் பந்துவீச முடிவு செய்தது.
HEINRICH KLAASEN IS TAKING ON EVERYBODY!
— Major League Cricket (@MLCricket) July 26, 2023
Heinrich Klaasen BLASTS 3 SIXES against Rashid Khan!
1⃣6⃣6⃣/4⃣ (15.5) pic.twitter.com/nYJQrnXh06
இந்நிலையில் முதலில் களமிறங்கி பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணி 8 விக்கெட்களை இழந்து 194 ரன்களை விளாசியது. இதில் நிகோலஸ் பூரான் மற்றும் கிரண் பொல்லார்டு இருவரும் சிறப்பாக விளையாடினார்கள். இந்நிலையில் 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணி 15 வது ஓவரின் போது 4 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தனர்.

இந்நிலையில் அந்த போட்டியில் 16வது ஓவரை ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் வீச வந்தார். அப்போது பேட்டிங்கில் இருந்த கிளாசன் அதிரடியாக ஆட வேண்டிய கட்டாயம் இருந்தது. இந்நிலையில் தான் அந்த ஓவரில் சிறப்பாக விளையாடிய கிளாசான் 6,6,2,4,6,2 என 6 பந்துகளில் 24 ரன்களை விளாசினார். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்நிலையில் இப்படி அதிரடி காட்டினாலும் 18 வது இவரின் போது வந்த போல்ட் ஒரே ஓவரில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தார், ஆனாலும் கிளாசான் பின்னர் சிக்சரருடன் 19.2 வது ஓவரிலேயே போட்டியை முடித்து வைத்தார் கிளாசன். இதனால் வரும் பிளே ஆஃப் சுற்றில் வாஷிங் டன் ப்ரீடம் மாறும் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணியும், 2வது பிளே ஆஃப் சுற்றில் சிட்டில் ஆர்கஸ் மற்றும் டெக்சாஸ் சூப்பர் கின்ஸ் அணியும் மோதுகிறது.





