உலகிலே அதிகம் பணக்கார டி20 கிரிக்கெட் தொடர் என்றால் அது ஐபிஎல் தான். கடந்த 2008 ஆம் ஆண்டு இளம் வீரர்களை கண்டடைவதற்காக உருவாக்கப்பட்ட இந்த ஐபிஎல் தொடர் தற்போது பெரிய அளவில் வளர்ந்து சர்வதேச கிரிக்கெட்டிலேயே தாக்கத்தை ஏற்படுத்தும் அளவிற்க்கு வளர்ந்து விட்டது. அதுமட்டுமல்லாமல் இதில் விளையாடும் வீரர்களுக்கு குறிப்பாக வெளிநாட்டு வீரர்களுக்கு கோடி கணக்கில் பணம் சம்பளமாக வழங்கப்படுகிறது.

இதனாலேயே பல வீரர்கள் தங்களுடைய சொந்த நாட்டின் அணியில் இருந்தே பிரிந்து ஐபிஎல் விளையாடும் அளவிற்கு மாறிவிட்டது. இப்படி ஒரு புறம் இருக்க மறுபுறம் சில வீரர்கள் பணத்தை எதிர்பார்க்காமல் நாட்டிற்காக விளையாடி வருகின்றன அந்த வகையில் ஒருவரை கூற வேண்டும் என்றால் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கை கூறலாம்.
இவர் கடந்த 2014 மற்றும் 2015ஆம் ஆடணுங்களில் நடைபெற்ற இந்திய பீமியர் லீக்கில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடினார். அதுக்கு பிறகு 2018ஆம் ஆண்டு நடந்த லீக் ஆட்டத்தில் ஐபிஎல் ஏலத்தின் போது மிட்செல் ஸ்டார்க்கை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 9.4 கோடிகளுக்கு விலைக்கு வாங்கியது.

ஆனால் அந்த வருட ஐபிஎல் போட்டியில் அவர் ஏதோஓ ஒரு காரணத்தினால் எந்த போட்டியிலும் விளையாடவில்ல. அதற்கு பிறகாவது ஐபிஎல் போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்த்து வந்த நிலையில் ஐபிஎல் போட்டிங்களில் இருந்து ஒதுங்கியே இருந்து வருகிறார் மிட்செல் ஸ்டார்க். இப்படிப்பட்ட நிலையில் தான் சமீபத்தில் அவர் கொடுத்த பேட்டி ஒன்றில் தான் ஏன் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவது இல்லை என்பது குறித்து பேசியுள்ளார்.
மிட்செல் ஸ்டார்க் கூறியது :
அவர் கூறுகையில் “நான் ஆஸ்திரேலிய அணிக்காக தொடர்ந்து விளையாட வேண்டும் என்பதற்காக சில விஷியங்களை நான் செய்யுய வேண்டியது இருந்தது. ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு அதிக பணம் கிடைக்கிறது. ஆனால் நான் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதை விடவும் என்னுடைய நாட்டின் அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாட நான் விரும்புகிறேன்.

அதனால் தான் இது போன்ற டி20 போட்டிகளில் இருந்து விலகியே இருக்கிறேன். என்னுடைய இடத்திற்கு மற்றொரு வேகப்பந்து வீச்சாளர வரலாம். 10 வருடங்களுக்கும் மேலாக மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுவது என்பது மிகவும் கடினமான ஒரு விஷயம். ஆனால் நான் இவ்வளவு தூரம் பயணித்து வந்ததற்கும் என்னுடை அணிக்கு நன்றி உள்ளவனாக இருக்க ஆசைப்படுகிறன் என்று கூறினார் மிட்செல் ஸ்டார்க்.
மிட்செல் ஸ்டார்க் கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி நடந்த நியூசிலாந்துக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆறிமுகமாகினார். அதற்கு பிறகு இதுவரையில் ஆஸ்திரேலிய அணிக்காக 77 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி விட்டார். மேலும் 3.3 என்ற எக்கனாமிக் ரேட்டுடன் 306 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்திருக்கிறார் மிட்செல் ஸ்டார்க்.





