உலக கோப்பை 2023 தொடரானது தொடங்க இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் ஆசிய கோப்பை தொடரானது தற்போது நடந்து முடிந்துள்ளது. இதில் இலங்கை அணியை அவர்களது சொந்த நாட்டிலேயே வீழ்த்திய இந்திய அணியானது 8வது முறையாக ஆசிய கோப்பையை வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது. அதற்கு முக்கியமான காரணம் முகமது சிராஜ் என்பதினால் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்த தொடரில் இந்தியா வென்ற நிலையில் அடுத்தாக உலக கோப்பை தொடரில் இந்தியா மோத இருக்கிறது. மேலும் இந்த போட்டியானது முழுக்க முழுக்க இந்தியாவில் நடைபெறுவதினால் இந்தியா கடந்த 2011 ஆம் ஆண்டு போலவே உலக கோப்பையை வென்று கடந்த பல வருடங்களாக ஐசிசி கோப்பையை இந்தியா வெல்லமுடியாத நிலையை மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படிபட்ட நிலையில் தான் இந்திய அணியின் முக்கிய வீரர்கள் குறித்து பேசியுள்ளார் முன்னாள் இந்திய அணியின் வீரர் முகமது கைப்.
ஹர்திக் பாண்டியா குறித்து பேசிய அவர் கூறுகையில் “பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா சிக்கலில் இருந்தபோது, ஹர்திக் பாண்டியா சிறப்பாக விளையாடி 87 ரன்கள் எடுத்தார் மற்றும் இஷான் கிஷானுடன் ஒரு முக்கிய பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினார். பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது போட்டியில், பாபர் ஆசாமின் விக்கெட்டை எடுத்தார். எனவே, அவர் ஒரு மேட்ச் வின்னர். அணி சிக்கலில் இருக்கும்போது, ஹர்திக் தனது அணியை சூழ்நிலையிலிருந்து காப்பாற்றுகிறார்.

டாப்-ஆர்டர் சரிந்தால், ஹர்திக் முன்னேறி மேட்ச் வின்னிங் நாக் விளையாடுகிறார். என் பார்வையில், ஹர்திக் பாண்டியா இந்த இந்திய அணியின் முதுகெலும்பு, ”என்று கைஃப் ஸ்டார் ஸ்போர்ட்ஸில் கூறினார். மேலும் ஜஸ்பிரித் பும்ராவின் அணிக்கு திரும்பியது குறித்தும் இந்த வருட ஆசிய கோப்பையில் அவரது தாக்கம் பற்றி கைஃப் மேலும் பேசினார்.
அவர் கூறியதாவது “காயம் காரணமாக நீண்ட நேரம் கழித்து விளையாடிய போதிலும், குறைபாடுகள் எதுவும் இல்லை. பும்ரா விக்கெட்டுகளை பெறுகிறார், அவருக்கு வேகம் கிடைத்துள்ளது, காயத்தில் இருந்து திரும்பும் வீரர்கள் பும்ராவாக இருந்தாலும் சரி, கேஎல் ராகுலாக இருந்தாலும் சரி, இந்திய அணிக்கு இது நல்ல அறிகுறி. பும்ராவின் இந்த ஃபார்ம், உலகக் கோப்பைக்கு முன் இந்தியாவுக்கு உண்மையிலேயே உதவும்.
மேலும் சுப்மன் கில்லின் பேட்டிங் பற்றியும் பேசிய அவர் கூறுகையில் “பல தேசிய போட்டிகளில் விளையாடும் போது, ரன்களை எடுப்பது எளிதல்ல. ஆனால் ஷுப்மான் கில் அங்கு இருந்து ஷாட்களை சிறப்பாக விளையாடினார். ஸ்பின்னர்களுக்கு எதிராக எப்படி விளையாடி ரன்களை எடுப்பது, புதிய பந்தை எவ்வாறு விளையாடுவது மற்றும் போட்டியின் இறுதிவரை தனது ஆட்டத்தை மேம்படுத்துவது எப்படி என்பதை அவர் புரிந்துகொள்கிறார். அவர் ஒரு அற்புதமான வீரராக மாறி வருகிறார் என்று அவர் மேலும் கூறினார்.




