அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை போட்டியானது வரும் அக்டோபர் மதம் 5ஆம் தேதி தொடங்க இருக்கிறது. ஆனால் அதற்கு முன்பாகவே ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி துவங்குகிறது. இந்த தொடரானது ஐசிசி உலகக் கோப்பைக்கு ஆசிய கண்டத்தைச் சேர்ந்த அணிகள் தயாராகும் வகையில் 50 ஓவர் போட்டிகளாக நடைபெறும் இத்தொடரில் களமிறங்கும் ரோகித் சர்மா தலைமையிலான 17 பேர் கொண்ட அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

அந்த அணியில் காயம் காரணமாக விலகியிருந்த கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதே போல மிடில் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேன் இல்லை என்ற காரணத்திற்காக திலக் வர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதே போல குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல் ரவீந்திர ஜடேஜா ஆகிய ஸ்பின்னர்களாகவும் முக்கியமாக காயத்தில் இருந்து திரும்பிய பும்ரா ஆசிய கோப்பையில் விளையாட இருக்கிறார்.
அயர்லாந்து அணிக்கு எதிராக நடந்த முதல் போட்டியிலேயே அசத்திய பும்ரா அடுத்தாக ஆசிய கோப்பையிலும் அதே வேகத்தில் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் வித்தியாசமான பவுலிங் ஆக்சனை கொண்டுள்ள அவர் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்து போட்டியின் எந்த நேரத்திலும் துல்லியமான யார்கர் பந்துகளை வீசி விக்கெட்டுகளை எடுத்து வெற்றியை இந்தியாவின் பக்கம் கொண்டு வரக்கூடிய கருப்பு குதிரையாக பார்க்கப்படுகிறார்.

அப்படிப்பட்ட அவர் காயத்தால் விலகியது 2022 ஆசிய மற்றும் டி20 டி20 உலக கோப்பையை தொடர்ந்து 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்நிலையில் பும்ராவை விட சுழல் பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் தான் இந்த உலகக் கோப்பையில் கேப்டன் ரோகித் சர்மாவின் துருப்பு சீட்டு பவுலராக இருப்பார் என்று முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தன்னுடைய ட்விட்டரில் போட்டிருந்த பதிவில் “குல்தீப் யாதவ் தான் இந்த ஆசிய கோப்பையில் ரோகித் சர்மாவின் ஆட்டநாயகனாக இருப்பார். குறிப்பாக இந்த ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பையில் மிடில் ஓவர்களில் குல்தீப் யாதவ் செயல்பாடுகளை நான் உற்சாகமாக பார்க்கப்போகும் விஷயங்களில் ஒன்றாகும்.
ஏனெனில் விக்கெட் டேக்கரான அவர் மிடில் ஓவர்களில் அடித்து நொறுக்கி ரன்களை குவிக்க நினைக்கும் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக ஃபிளைட் மற்றும் சுழல் ஆகியவற்றை பயன்படுத்தி விக்கெட்டுகளை எடுக்க முயற்சிப்பதை பார்ப்பது எப்போதுமே சிறந்த போட்டியாக இருக்கும் என்று பதிவிட்டிருக்கிறார். குல்தீவ் யாதவ் கடந்த காலங்களில் சொதப்பினாலும் பின்னர் சிறப்பாக விளையாடி அனைவரையும் ஆச்சரிய படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.



