உலக ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை ஒருநாள் போட்டியானது வரும் ஆக்டோபர் மாதம் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் விளையாடும் அணிகளுக்கு ஏற்கனவே அட்டவணையானது வெளியிடப்பட்டது. மேலும் முக்கியமாக இந்த உலக கோப்பை போட்டியானது முழுக்க முழுக்க இந்தியாவில் நடைபெறுகிறது என்பதினால் ரசிங்கர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இமயத்தை தொட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வருட உலக கோப்பை போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், ஆத்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் என எட்டு அணிகள் நேரடியாகவும், உலக கோப்பை குவாலிபயர் சுற்றில் சிறப்பாக விளையாடிய இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளும் இந்த உலக கோப்பையில் பங்கு பெறுகின்றனர். மேலும் முதல் போட்டியானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைத்தனத்தில் நடைபெறுகிறது.
அதே போல இந்தியா vs பாகிஸ்தான் போட்டியானது வரும் ஆக்டோபர் 15ஆம் தேதி நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதனிடையே கங்குலி, சச்சின் டெண்டுல்கர், சேவாக் போன்ற இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான்கள் பலரும் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில் தான் இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது கைஃப் கருத்து தெரிவித்துள்ளார்.

முகமது கைஃப் கூறியது :
இந்நிலையில் வருகின்றன உலக கோப்பை போட்டியில் இந்தியாவின் வெற்றி குறித்து பேசிய முன்னாள் இந்திய அணியின் வீரர் முகமது கைஃப் பேசுகையில் “உலக கோப்பையில் இந்தியா வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் மிகவும் அதிகமாக இருக்கிறது. ஏனென்றால் மற்ற அணிகளை ஒப்பிடும் போது இந்திய அணி தங்களுடைய சொந்த ஊரில் விளையாடுவதினால் இங்குள்ள சூழ்நிலைகள் குறித்து அவர்களுக்கு மிகவும் நன்றகவே தெரியும்.

வரும் உலக கோப்பை போட்டியில் சுழலிர்பந்து பந்து வீச்சாளர்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த போகிறார்கள். இங்கு நடக்கும் போட்டிங்களில் வெல்வதற்கான வீரர்கள் எங்களிடம் இருக்கிறார்கள். ஆனால் இவை அனைத்தும் சரியாக நடக்க இந்திய அணியின் மூத்த வீரர்கள் நல்ல செயல்திறனில், உடற்தகுதியிலும் இருக்க வேண்டும். இந்தியாவினால் சரியாக பேட்டிங் செய்ய முடிந்தால் எங்களை வீழ்த்திவது என்பது மற்றவர்களுக்கு மிகவும் சவாலாக இருக்கும்.
இது நடக்க வேண்டும் என்றால் ரோஹித் ஷர்மா போன்ற பெரிய வீரர்கள் பெருமளவு பங்களிப்பை இந்த போட்டிகளில் கொடுக்க வேண்டும். சமீபத்தில் காயமடைந்த பும்ரா மீண்டும் திருப்ப இருப்பதாக சொல்கின்றனர். ரோஹித் சர்மாவும் பும்ராவின் இழப்பை நினைத்து வருந்தியிருக்கலாம். பும்ரா மீண்டும் உலக கோப்பைக்கு விளையாட வரும் பட்சத்தில் இந்தியாவிற்கு அந்த விஷயம் மிகப்பெரிய நல்ல செய்தியாக இருக்கும் என்றார் முகமது கைஃப்.



