உலக கிரிக்கெட் போட்டிகளில் மற்ற அணிகளுக்கு சவாலான அணியாக இருந்து வருவது இந்திய அணி. பல சிறப்பான பேட்ஸ்மேன்கள் இந்திய அணியில் உருவாகி இருக்கின்றனர் அவர்களில் மிகவும் முக்கியமானவர் சச்சின் டெண்டுலர். சிறு வயதாக இருக்கும் போதே கிரிக்கெட்டில் இணைந்த அவர் தொடர்நது பல யாராலும் நெருங்க கூட முடியாத சாதனைகளை படைத்தவர் சச்சின் டெண்டுல்கர்.

இந்நிலையில் சச்சினுக்கு பிறகு U-19 கிரிக்கெட்டில் கடந்த 2008ஆம் ஆண்டு கோப்பையை வென்று சர்வதேச கிரிகேட்டில் காலடி எடுத்து வாய்த்த விராட் கோலி பல சாதனைகளை படித்தும் சச்சினுடைய சாதனைகளை முறியடிப்பார் என்றும் நம்பப்படுகிறது . இதுவரையில் உலகின் சிறப்பான பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விளையாடி 25000 ரன்களை கடந்து 75 சத்தங்களையும் அடித்த விராட் சச்சின் டெண்டுல்கரின் சதம் சாதனையை முறியடிப்பார் என்று எதிர்பார்க்படுகிறது.
இந்நிலையில் விராட் கோலிக்கு அடுத்தபடியாக தற்போது நவீன கிரிக்கெட்டில் கலக்கி வருபவர் சுப்மன் கில். இவர் கடந்த 2018 U19 உலகக்கோப்பையில் சிறப்பான திறமையை காட்டி மேன் ஆஃப் தி டோர்னமினேட் என்ற விருதை பெற்றார். மேலும் இந்த வருட ஐபிஎல் முதற்கொண்டு அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் சதங்களை அடித்து விட்டார். இதனால் சுப்மன் கில்லை பலரும் சச்சின் மற்றும் விராட் கோலியுடன் ஒப்பிட்டு பேசிவரும் நிலையில் தான் இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் கருத்து தெரிவித்துள்ளார்.

சுப்மன் கில் குறித்து சமீபத்தில் அவர் கொடுத்த பெட்டியில் சச்சின் டெண்டுல்கர் ஷட்டுகளை கட்சிதமாக ஆடும் பேட்ஸ்மேன். ஒருவேளை நான் விராட் கோலியை சச்சினுடன் ஒப்பிட்டு பேசினால் விராட் கோலியிடம் சில குறைபாடுகள் இருப்பதை நம்மமல் காண முடியும். குறிப்பாக இந்தியா கடந்த 2014 ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது விராட் கோலி பார்மில் இல்லை. எனவே அங்கு ஜேம்ஸ் ஆண்டர்சனின் பந்துகளில் திணறினார். அவருடைய அவட் சைடு ஸ்டெம்ப் லைனில் விராட் கோலியால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.

இதனால் அந்த தொடர் சொதப்பியது. ஆனால் சுப்மன் கில் பேட்டிங்கை பார்த்தல் அது கிட்டத்தட்ட சச்சினுடைய பேட்டிங் போன்றே இருக்கிறது. குறிப்பாக தற்போது சுப்மன் கில் சரியான பார்மில் இருக்கும் நேரத்தில் அவரை அவுட் செய்வ து என்பது மிகவும் கடினமான விஷயம். ஏனென்றால் சுப்மன் கில் பேட்டிங்கில் பெரிதாக அந்த பிழைகளும் இல்லை. டெண்டுல்கரும் கோலியும் பெரிய ஜாம்பவான்கள். அவர்கள் இருவருடனும் நான் சேர்ந்த விளையாடி இருக்கிறேன்.
ஆனால் விராட் கோலியிடம் சில வீக்னஸ் இருக்கிறது என்றார். மறுபுறம் சுப்மன் கில் சச்சின் போன்று உருவாக அதிக வாய்ப்பு இருக்கிறது. பேட்டிங் நுட்பமாக இருந்தாலும் சரி மனதளவிலும் அவர் வலிமையாக இருக்கிறார் என்று கூறினார் முகமது கைப். இதற்கு முன்னர் கபில் தேவ் சுப்மன் இன்னும் சில ஆண்டுகள் விளையாடிய பிறகுதான் அவர் விராட் மற்றும் சச்சின் போல ஜாம்பவங்களுடன் ஒப்பிட முடியும் என்று கூறியது குறிப்பிடதக்கது.





