நேற்று முன்தினம் நடந்த ஹைதராபாத் அணியும் லக்னோ அணியும் ராஜிவ் காந்தி சரசவதேச மையதானத்தில் மோதியது. பல அணிகள் ஒரே புள்ளியில் இருப்பதினால் இந்த போட்டியில் வெற்றி பெறுவது எனப்து இரண்டு அணிகளுக்குமே மிகவும் முக்கியமான ஒன்றாக இருந்தது.இந்நிலையில் இந்த போட்டியில் டாஸை வென்ற முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இதை அடுத்து பேட்டிங் செய்ய வந்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்களில் இழந்த 165 ரன்களை மட்மே அடித்தது.

இதனை தொடர்ந்து களமிறங்கிய ஹைதராபாத் அணி முதல் ஓவரில் 8 ரன்கள் மட்டுமே எடுத்து நிலையில் அதற்கு பிறகு அதிரடி காட்ட ஆரம்பித்த ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களான அபிஷேக் மற்றும் டிராவிஸ் ஹெட் இருவரும் அற்புதமாக விளையாடி லக்னோ அணியின் பந்துவீச்சை தொம்சம் செய்தனர். இதனால் ஹைதராபாத் அணி 9,4 ஓவர்களிலேயே ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் போட்டியை வென்றது ஹைதராபாத் அணி.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்த பிறகு லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கேஎல் ராகுலை அழைத்த பேசியிருந்தார். அதன் போது கேஎல் ராகுலை சஞ்சீவ் கோயங்கா கொஞ்சம் திட்டியது போல தெரிந்தது. இது தொடர்பான வீடியோ பதிவு சோசியல் மீடியாவில் வைரலாக நிலையில் பலவிதமான கருத்துக்களை கூறிவருகின்றனர் நெட்டிசன்கள். இந்த மாதிரியான சூழ்நிலையில் தான் இந்திய அணையின் வீரரான முகமது சமி இது குறித்து பேசியுள்ளார்.

அவர் கூறுகையில் : வீரர்களுக்கு மரியாதை உண்டு. நீங்கள் உரிமையாளராக இருப்பதால், நீங்கள் மரியாதைக்குரிய நபர். பலர் உங்களைப் பார்த்து உங்களிடமிருந்து கற்றுக்கொள்கிறார்கள். இவையெல்லாம் கேமராக்களுக்கு முன்னால் நடந்தால். இது வெட்கப்பட வேண்டிய விஷயம்
நீங்கள் அதை செய்ய வேண்டும் என்றால், பல வழிகள் உள்ளன. டிரஸ்ஸிங் ரூமிலும் ஹோட்டலிலும் நீங்கள் அதையே செய்திருக்கலாம். அப்படி செய்யாமல் களத்தில் இந்த மாதிரியான விஷியத்தை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இதைச் செய்வதன் மூலம் நீங்கள் செங்கோட்டையில் கொடியை ஏற்றியது போல் ஆகிவிட்டது.
கே எல் ராகுல் சாதாரண வீரர் அல்ல. அவர் ஒரு அணியின் கேப்டன். இது ஒரு குழு விளையாட்டு. திட்டம் வெற்றியடையவில்லை என்றால், அது பெரிய விஷயம் இல்லை. விளையாட்டில் எதுவும் சாத்தியம். நல்ல நாட்களும் இருக்கலாம் அல்லது கெட்ட நாட்கள் இருக்கலாம் என்பதை நான் புரிந்துகொள்கிறேன், ஆனால் ஒவ்வொரு வீரருக்கும் மரியாதை உண்டு, பேசுவதற்கு ஒரு வழி இருக்கிறது. ஆனால் இது மிகவும் தவறான செய்தியை மற்றவர்களுக்கு அனுப்புகிறது என்று கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார் முகமது சமி.





