இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் தோனி என்ற பெயர் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. அந்த சொந்தக்காரரான தோனி கேப்டனாக இருந்த வரையில் பல சாதனைகளை செய்து இருக்கிறது. குறிப்பாக கடந்த 2007ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை பெற்று கொடுத்தது. பின்னர் 2011 உலக கோப்பை போட்டியில் பல வருடங்களுக்கு பிறகு உலக கோப்பையை பெற்று கொடுத்ததை இன்னமும் யாராலும் மறக்க முடியாது.

அதே போல தோனி 2019 உலக கோப்பை போட்டியில் ஆட்டமிழந்ததையும் யாரும் மறக்க முடியாது. ஏனென்றால் தன்னுடைய முதல் ஆட்டத்தை ரன் அவுட் மூலம் ஆரம்பித்த தோனி இந்தியாவுக்கான தன்னுடைய கடைசி ஆட்டத்திலும் ரன் அவுட் ஆனார். அது இனித்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி சம்பவமாக இருந்தது.
இந்நிலையில் சமீபத்தில் தனியார் இகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தோனி அங்கு சில கேள்விகளுக்கு பதிலளித்த நிலையில் வாங்கள தேசத்திற்கு எதிராக நடந்த ஒரு சுவாரசியமான சம்பவத்தை தோனி நினைவு கூர்ந்தார். அவர் பேசுகையில் “நான் காரக்பூர் ரயில்வே நிலையத்தில் பணிபுரிந்த போது பெங்காலி மொழியை சரளமாக பேசவும் புரிந்து கொள்ளவும் முடிந்தது. தற்சமயம் நான் பெங்காலி பேசினால் சில தவறுகள் செய்யலாம்.

ஆனால் நான் காரக்பூரில் பணிபுரியும் போது பெங்காலி நன்றாகவே பேசினேன் நன்றாகவே புரிந்து கொண்டேன். அந்த வகையில் ஒருமுறை நான் வங்கதேச அணிக்கு எதிரான ஒரு தொடரில் விளையாடி கொண்டிருந்த போது ஒரு போட்டியில் பேட்டிங் செய்து கொண்டிருக்கையில் எனக்கு பெங்காலி புரியும் என்று வங்கதேச வீரர்களுக்கு தெரியாது. எனவே எனக்கு எதிரான திட்டத்தை அவர்கள் பெங்காலிலேயே பேசிக்கொண்டனர்.
விக்கெட் கீப்பரும் பெங்காலியில் இவ்வாறு பந்து வீச வேண்டும் என்று கூறினார். எனக்கு அது முன்கூட்டியே தெரிந்துவிட்டது. எனவே அந்த பந்துகளை பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசினேன். பின்னர் போட்டி முடிந்து எனது சிரிப்பை பார்த்த வங்கதேச வீரர்கள் இவருக்கு பெங்காலியும் புரியும் போல என்று அவர்களுக்குள் பேசியபடி அங்கிருந்து சென்றதாக தோனி அந்த பேட்டியின் போது கூறியிருந்தார் மஹேந்திர சிங் தோனி.



