இன்றைய ஐபிஎல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனாக மகேந்திர சிங் தோனிக்கு 200வது போட்டியாகும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சென்னை அணி இந்த வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று ரசிகர்கள் முதற்கொண்டு சென்னை அணியும் விரும்புகிறது.

ஆனால், முதல் இன்னிங்சில் சென்னை நினைப்பது போல நடக்க வில்லை. ஏனெற்றால் ராஜஸ்தான் அணி பதறுவதற்கு பதிலாக சென்னை அணி பதறியது. குறிப்பாக மெயின் அலி பல விக்கெட்டுகளை எடுக்கும் வாய்ப்பை தவற விட்டார். அதே போல பந்துச்சாளர்களும் சரியாக போடவில்லை. கடந்த மும்பைக்கு எதிரான போட்டியில் பல விக்கெட்டுகளை எடுக்க உதவி செய்த ரவீந்திர ஜடேஜா அதிக ரன்களை வாரி கொடுத்தார்.
ஆனாலும் சில 2 விக்கெட்டுகளை எடுத்து கொடுத்தார் ஜடேஜா. இந்நிலையில் தான் தமிழ்நாட்டின் வீரர் அஸ்வின் சிக்ஸர் அடித்ததை பார்த்த எம்.எஸ்.தோனி செய்த செயல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் முதல் இன்னிங்ஸின் 15வது ஓவரில் ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ஜோஸ் பட்லர் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது நடந்தது. இந்த நேரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அறிமுகமாகிய ஆகாஷ் சிங் பந்து வீசினார்.

ஆனால் அஸ்வின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பந்தில் இரண்டு சிக்ஸர்களை அடித்தார். அஸ்வினின் இத்தகைய பேட்டிங்கைப் பார்த்த மகேந்திர சிங் தோனியும் விக்கெட்டுக்குப் பின்னால் நின்று ஆச்சரியப்பட்டார். இருப்பினும் தோனி கூறிய அறிவுரைகளை பின்பற்றி ஆகாஷ் சிங் கடைசி பந்தில் அஸ்வினை அவுட்டாக்கினார். இந்நிலையில் அஸ்வின் அடித்த சிக்ஸர்கள் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
— INDIAN CRICKET (@FanOfIndianCric) April 12, 2023
தற்போது நடந்து வரும் போட்டியில் ப சென்னை சூப்பர் கிங்ஸ் டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்தது, அதற்கு பதிலடியாக ராஜஸ்தான் ராயல்ஸ் முதல் இன்னிங்ஸில் 175 ரன்கள் எடுத்தது. இதன் போது ஜோஸ் பட்லர் அதிகபட்சமாக 52 ரன்களை குவித்தார். மேலும் தேவ்தத் படிக்கல் 38 ரன்களில் இன்னிங்ஸ் ஆடினார். இந்நிலையில் தற்போது இரண்டாவது இன்னிங்கை ஆடிவரும் சென்னை இந்த செய்தியை எழுதும் வரையில் எடுத்துள்ளது.




