உலகெங்கும் நடைபெறும் லீக் போட்டிகளில் முக்கியமானது மட்டும் முதன்மையான லீக் போட்டிகளில் ஒன்று அது இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டி தான். இது கடந்த 16 வருடங்களாக இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் பல நாடுகளை சேர்ந்த வீரர்களும் விளையாடுவதற்கு விருப்பமாக இருப்பார்கள். இது வணிக ரீதியாகவும் மிகப் பெரிய அளவில் விளையாடும் விளையாட்டு ஆகும். இந்த லீக் தொடரிலிருந்து முக்கிய அணிகள் என்றால் அது மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான்.

இரண்டு அணிகளும் வணிக ரீதியாக மட்டுமல்லாமல் கோப்பை ரீதியாகவும் முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் இருந்து வருகின்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியின் சந்தை மதிப்பு சற்று அதிகமாகவே இருந்து வருகிறது. சென்னையை அணியானது இந்த வருடம் ஐந்தாவது ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி இருந்தது. ஆனால் மும்பை அணி அதற்கு முன்பாகவே ஐந்து முறை கோப்பைகளை வென்று முதல் இடத்தில் இருந்து வருகிறது.
அவர் 2013 ஆம் ஆண்டு கேப்டன் பதவி ஏற்ற பின் 2015, 17, 19 மற்றும் 20 ஆண்டுகளில் 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு மும்பை அணியானது டிரேடிங் மூலம் குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை ஏலத்தில் எடுத்தது. இது மும்பை அணி ரோகித் சர்மாவின் கேப்டன் பதவிக்கு பிறகு அவரை கேப்டன் சியில்ல் அமர வைப்பதற்கான திட்டம் என்று பலர் கூறி வந்தனர்.

ஆனால் தற்போது மும்பை அணி ரோஹித் ஷரம்வை கேப்டன் பதவியில் இருந்து விலகி ஹர்திக்பாண்டியாவை கேப்டன் ஷிப் பதவியை கொடுத்துள்ளது. ரோஹித் சாரமா கேப்டன் பதவியில் இருந்து விலகுவதற்கு முன்பாகவே மும்பை அணி நிர்வாகம் தற்பொழுது ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. கேப்டன் பகுதியில் ஹர்திக் பாண்டியாவிற்கு வழங்கி உள்ளது. அடுத்த வருடம் நடைபெற உள்ள ஐபிஎல் 2024 மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா அணியை வழி நடத்துவார் என்று அதிகாரப்பூர்வ தகவல் தற்போது மும்பை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் ரோகித் சர்மாவின் 10 வருட கேப்டன்ஷிப் முடிவுக்கு வந்துள்ளது இது தற்பொழுது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது, ரோகித் சர்மா இதுவரை மும்பை அணியின் கேப்டன் 158 போட்டிகளில் விளையாடி உள்ளார் அதில் 87 போட்டிகளில் வெற்றியும் 67 போட்டிகளில் தோல்வியும் நான்கு போட்டிகளில் ட்ராவிலும் முடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் அடுத்த வருட ஐபிஎல் போட்டியில் அவர் கலந்து கொள்ள மாட்டார் என்றும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து மும்பை அணியின் ரசிகர்கள் மும்பை அணியை டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்தொடர்வதை நிறுத்திய நிலையில் மும்பை அணியின் பின்தொடருபவர்கள் குறைந்து கொண்டே இருகின்றார்கள். அது மட்டும் அல்லாமல் மும்பை அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மும்பை அணியை மும்பை அணியின் ரசிகர்கள் சரமாரியாக கேள்விகளை எழுப்புவது மட்டும் அல்லாமல் உங்களை போன்ற அணிக்கு ஆதரவு தெரிவிபதர்க்கு பெங்களூரு போன்ற அணிக்கு ஆதரவு தெரிவிக்கலாம் என்று அவர்களது ஆதங்கத்தை கொட்டி வருகின்றனர்.





