உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக தொடங்கி பெற்று வருகிறது. அதில் இன்று 38வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஜெய்பூரில் உள்ள மைதானத்தில் மோதின. ராஜஸ்தான் அணி இந்த தொடர் முழுவதும் சிறப்பாகவே செய்யல் பட்டு இருந்தனர்.அனால் மும்பை அணிக்கு வெற்றி தோல்வி முகமாகவே இருந்து வருகிறது.

ராஜஸ்தான் அணி கடந்த போட்டியில் வெற்றி பெற்றும் மும்பை அணியும் கடந்த போட்டியில் வெற்றி பெற்று இருந்தது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து இருந்தார். ஆனால் அது அவர்களுக்கு சதகமாக அமையவில்லை. மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. அதே போல் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து வெளியேறினார்கள். இதில் ராஜஸ்தான் அணியின் ஆதிக்கம் அதிக அளவில் இருந்தது.

20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களை மட்டுமே அடித்து இருந்தனர். இதில் அதிகபட்சமாக திலக் வர்மா 65 ரன்களையும் நேஹால் வதேரா 49 ரன்களையும் நபி 23 ரன்களையும் அடித்து இருந்தனர். அணியின் கேப்டன் வழக்கம் போல் இன்றைய போட்டியிலும் அவரால் ஜொலிக்க முடியவில்லை. அவரும் 10 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். மும்பை அணியை சுருட்ட முக்கிய காரணமாக இருந்தவர் சந்தீப் ஷர்மா தான். அவர் 5 விக்கெட்டுகளையும் போல்ட் 2 விக்கெட்டுகளையும் ஆவேஸ் கான் மற்றும் சஹல் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர்.
180 ரன்னை இலக்காக் கொண்டு களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 18.4 ஓவர்கள் முடிவில் 9விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்து இருந்தது. போட்டியின் இடையில் மழை குறிக்கிட்டதால் போட்டி நிறுத்தப்படுமா அல்லது ஓவர் குறைக்கப்படுமா என்ற கேள்வி இருந்தது. ஆனால் அவ்வாறு எல்லாம் ஏதும் செய்யவில்லை. ராஜஸ்தான் அணியின் அதிக பட்சமாக ஜெய்ஸ்வால் 104 ரன்களும் சஞ்சு சாம்சன் 38 ரன்களும் பட்லர் 35 ரன்களையும் அடித்து இருந்தார். மும்பை அணியின் பந்து வீச்சு ராஜஸ்தான் அணிக்கு அழுத்தம் தரும் வகையில் அமையவில்லை.

இதில் மும்பை அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது அவர்களின் மோசமான பேட்டிங் தொடக்கம் தான். அதுமட்டும் அல்லாமல் அவர்களது பீல்டிங்கும் சுமாராக தான் இருந்தது. மும்பை அணி கடந்த 12 வருடங்களாக ராஜஸ்தான் அணியை அவர்களது சொந்த மைதானத்தில் வைத்து வெற்றி பெற்றது கிடையாது அதவே தான் இன்றும் நிகழ்ந்தது.





