உலக கோப்பை தொடர்ந்து நாளை நடக்க இருக்கும் நிலையில் கொணடாடங்கள் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் இருந்தே தொடங்கி விட்டது. கடந்த ஒரு வாரமான பலரும் இந்த உலக கோப்பையில் யார் வெற்றியடைவார்கள், யார் முதல் 4 இடங்களுக்கு வருவார்கள். யார் அதிக ரன்களை விளாசுவார்கள், யாரை எடுக்காதது அல்லது எடுத்து பாதகமாக அல்லது சாதகமாக இருக்கும் என்பது குறித்து பல கருத்துக்களை முன்னாள் வீரர்களும், கிரிக்கெட் வல்லுனர்களும் கூறி வருகின்றனர்.

அந்த வகையில் முன்னாள் இலங்கை அணியின் புகழ்பெற்ற சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் மற்றும் பல முன்னாள் வீரர்களும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கு பதிலளித்துளனர். அவற்றில் யார் எல்லா காலங்களிலும் சிறந்த வீரர் என்ற கேள்வியும் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த முத்யா முரளிதரன் அனைவரும் ஆச்சரியப்படும் படியான ஒரு கருத்தை கூறினார்.
அதாவது முத்யா முரளிதரன் கடந்த 2011ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் விளையாடிய அதிரடி வீரரான சேவாக் எல்லா காலங்களிலும் சிறந்த பேட்டர் என்ற கருத்தை கூறினார். இது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. ஏனென்றால் சச்சின் டென்டுல்கர் விராட் போன்றவர்களுடன் ஒப்பிடும் போது சேவாக் குறைவாக சதங்களும் ரன்களும் மட்டுமே அடித்திருக்கிறார். இருந்த போதிலும் தன்னை பொறுத்தவரையில் GOAT வீரர் என சேவாக்கை கூறியுள்ளார்.
Recalling those names etched in GOLD! 😍
— Star Sports (@StarSportsIndia) October 3, 2023
Our StarCast @IrfanPathan, @wasimakramlive, @M_Raj03, @PiyushChawla255 & more name their greatest of all time ODI cricketers!
Name yours 👇 pic.twitter.com/gP8UCAnNgu
இந்நிலையில் இந்த அணியின் அதிரடி தொடக்க வீரரான வீரேந்திர சேவாக் 104 டெஸ்ட், 251 ஒருநாள் மற்றும் 19 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக 14 ஆண்டு கால சர்வதேசப் போட்டிகளில் விளையாடி முறையே டெஸ்ட் போட்டிகளில் 8586 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 8273 மற்றும் டி20 தொடரில் 394 ரன்கள் எடுத்தார். 2011 உலகக் கோப்பையைத் தவிர, 2007 டி20 உலகக் கோப்பையையும் தோனியின் தலைமையில் வென்றார்.

இந்தியாவுக்கான சர்வதேச கிரிக்கெட் வீரராக, சேவாக் இலங்கைக்கு எதிராக 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார், அதில் அவர் 1239 ரன்கள் எடுத்தார், மேலும் 55 ஒருநாள் போட்டிகளில் 1699 ரன்கள் எடுத்தார். அவர் 2014 டி20 உலகக் கோப்பை வெற்றியாளர்களுக்கு எதிராக மூன்று டி20 போட்டிகளில் பங்கேற்று மொத்தம் 91 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடதக்கது.
இந்நிலையில் முரளிதரனைத் தவிர, இர்பான் பதான், வாசிம் அக்ரம், சஞ்சய் மஞ்ச்ரேக்கர், பியூஷ் சாவ்லா, சஞ்சய் பாங்கர் மற்றும் மிதாலி ராஜ் ஆகியோரிடமும் G.O.A.T-க்கான தேர்வு குறித்து கேட்கப்பட்டது. பதான், சாவ்லா மற்றும் மிதாலி ஆகியோர் டெண்டுல்கரின் பெயரைப் கூறினார்கள். அதே சமயம் அக்ரம் மற்றும் மஞ்ச்ரேகர் ஆகியோர் சர் விவ் ரிச்சர்ட்ஸ் பெயரை குறை முன்னாள் இந்திய ஆல்ரவுண்டரும், பேட்டிங் பயிற்சியாளருமான பங்கர் எல்லா காலங்களிலும் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி என்றார்




