ஐபிஎல் நடந்து முடிந்த நிலையில் சமீபத்தில் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியானது நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வியை சந்திதது. இதற்கு முக்கியமான காரணமாக கருதப்படுவது அஸ்வின் இந்திய அணியில் இடம்பெறாததுதான் என்று சொல்லப்பட்டது. மேலும் சிறப்பாக விளையாடாத விராட் கோலி, ரோஹித் ஷர்மா, புஜாரா போன்றாவார்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர்.

இவற்றை விடவும் குறிப்பாக உலக டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் ஒன் பந்துவீச்சாளராகவும், பேட்டிங்கில் 3000 ரன்களுக்கு மேலும், 450 விக்கெட்டுக்கும் மேலும் எடுத்த ஒரு நவீன டெஸ்ட் கிரிக்கெட்டின் ஜாம்பவான் அஸ்வினை டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியின் போது அணியில் வைக்காதது குறித்து பல முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர். இந்நிலையில் இந்த போட்டி நடைபெறுவதற்கு 48 மணிநேரங்களுக்கு முன்னர் தான் அணியில் விளையாட மாட்டேன் என்று தெரிந்து கொண்டதாக அஸ்வின் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருந்தார்.
மேலும் அவர் பேட்டியில் கூறுகையில் “பலர் நான் அதிகமாக யோசிப்பதாக நினைக்கலாம். ஓரு வீரர் 15 முதல் 20 போட்டிகள் வரையில் விளையாட போகிறார் என்ற அதை பற்றி யோசிக்க மாட்டார். ஆனால் நீங்கள் ஒருசில போட்டிகள் மட்டும்தான் விளையாட போகிறீர்கள் என்கிற பட்சத்தில் கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று அதிகமாக யோசிப்பீர்கள். அப்படி நான் செய்வது என்னை சிறப்பாக செயல்பட உதவுகிறது.

நீங்கள் 15 போட்டிகள் விளையாட போகிறீர்கள் உங்களை அணி பார்த்துக்கொள்ளும் என்றும் உங்களுக்கு பொறுப்புகள் வழங்கப்படும். கேப்டன் பொறுப்பும் வழங்கப்படும் என்றால் நான் ஏன் மற்றவற்றை பற்றி யோசிக்க போகிறேன். உண்மையில் ஒருவரின் வாழ்க்கையை வைத்து அவர் அதிகமாக சிந்திப்பவர் என்று எண்ணுவது சரியானது கிடையாது. அந்த நபருக்கு மட்டுமேதான் தெரியும் அவர் எப்படிப்பட்ட பாதையில் பயணித்தார் என்று.
ஒரு சில எனக்கு கேப்டன் பதவி என்ற கருத்து வரும்போதெல்லாம், இந்திய அணி வெளிநாடு சென்று விளையாடும் போது அஸ்வின் பெயர் இருக்காதா நிலையில் அவரை ஏன் கேப்டனாக மாற்றுகிறீர்கள் என்று பேசுகின்றனர். நான் அணியில் இருக்கிறேனோ? இல்லையோ? என்பதனை பற்றி என்னால் கூற முடியாது. ஆனால் என்னால் அந்த சந்தர்ப்பத்தை உருவாக்கி அதனை பெற முடியும், எனவே இந்த விஷியத்தில் நான் யாரையும் குறை கூறவில்லை என்றார் அஸ்வின்.

மேலும் அஸ்வின் தன்னுடைய குடும்பத்தை பற்றி பேசுகையில் “என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் என்னை விட என்னுடைய குடும்பம் தான் அதிகம் சிரமப்பட்டது. என்னால் அணைத்து வகையான போட்டிகளிலும் பதர்ட்டம் இல்லாமல் விளையாட முடியும் ஆனால் என்னுடைய தந்தை ஒவ்வொரு போட்டிகளையும் உணர்ப்பு போர்வமாக பார்ப்பார். இதனால் அவருக்கும் பாதிப்பும் சங்கடமும் ஏற்படுகிறது. தற்போது அவருக்கு இதய பிரச்னை உள்ளிட்ட பல பாதிப்புகள் இருக்கிறது என்று பேசியுள்ளார் அஸ்வின்.




