அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை போட்டியானது வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக தற்போது ஆசிய கோப்பை போட்டியானது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மூலம் உலக கோப்பை போட்டியில் விளையாடும் ஆசிய அணிக்கு நல்ல ஒரு பயிற்ச்சியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஆசிய கோப்பை தொடரில் இந்த நிலையில் கடந்த 2ஆம் தேதி இந்தியா vs பாகிஸ்தான் போட்டியானது நேற்று முன்தினம் நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் மழை வரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு பேட்டிங் செய்வதாக அறிவித்த நிலையில் தடுமாறிய இந்திய அணி 48.5 ஓவரில் 266 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதை தொடர்ந்து 267 ரன்களை துரத்திய பாகிஸ்தானை சேசிங் செய்யவிடாமல் மழை வந்து மொத்தமாக தடுத்ததால் போட்டி ரத்து செய்யப்பட்டது. அதன் காரணமாக இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் பகிர்ந்து கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்தப்போட்டியில் முக்கியமான தருணம் என்று கூறினால் முன்னதாக ஷாஹீன் அப்ரிடி, ஹரிஷ் ரவூப் ஆகியோருக்கு எதிராக ரோகித் சர்மா போன்றவர்கள் தடுமாறினாலும் விராட் கோலி காப்பாற்றுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் ரோஹித் அவுட்டானதும் களமிறங்கிய விராட் கோலி இன்சைட் எட்ஜ் வாங்கி க்ளீன் போல்ட்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தார்.

மேலும் பின்னர் வந்த பேட்ச்மன்களும் பாகிஸ்தான் அணியின் சவாலான பந்துவீச்சுக்கு முன்னதாக திணறினார்கள். ஆனாலும் பின்னர் ஹர்திக் பாண்டியா மற்றும் இஷான் கிஷான் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தாலும் மழை குறுக்கிட்டு இரண்டவது இன்னிங் நடக்காமல் போனது இதனால் ரசிகர்களுக்கு மட்டுமின்றி பல வணிக ரீதியுலாக இந்த போட்டியில் முதலீடு செய்த்தவர்களுக்கும், ஒளிபரப்பும் ஊடகங்களுக்கும் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் ஆசிய கோப்பை போட்டியை இந்த முறை நடத்தும் பாகிஸ்தான் நாட்டில் அதனை மைதானங்கள் இருந்தாலும் அதே போல இலங்கையில் மற்ற பல மைதானங்கள் இருந்தாலும் பாகிஸ்தான் vs இந்தியா போட்டியின் போது மழை வரும் என்று தெரிந்தும் கூட அங்கேயே போட்டியை வைத்த ஆசிய கோப்பை கமிட்டி மீது பல விமர்சனங்கள் வந்தன. இந்த நிலயில் தான் பாகிஸ்தான் அணியின் முன்னாள் சேர்மன் நஜாம் சேதி இந்த விஷயம் குறித்து பேசியுள்ளார்.

அவர் கூறுகையில் “மழை முன்னறிவிப்புகளின் காரணமாக கொழும்பில் இருந்து அம்பாந்தோட்டாவுக்கு அடுத்த இந்தியா-பாகிஸ்தான் போட்டியை மாற்ற முடிவு செய்துள்ளதாக பிசிசிஐ/ஏசிசி இன்று பிசிபிக்கு தெரிவித்தன. ஆனால் அவர்கள் ஒரு மணி நேரத்திற்குள் மனம் மாறி கொழும்பை விளையாடும் இடமாக அறிவித்தனர். என்ன நடக்கிறது? பாகிஸ்தானிடம் விளையாடி தோல்வியடைய இந்தியா பயப்படுகிறதா? மழை முன்னறிவிப்பு எந்த நிலையில் இருக்கிறது என்று பாருங்கள் டிவிட் செய்துள்ளார்.
BCCI/ACC informed PCB today that they had decided to shift next India-Pak match from Colombo to Hambantota because of rain forecasts. Within one hour they changed their mind and announced Colombo as the venue. What’s going on? Is India afraid to play and lose to Pakistan ? Look… pic.twitter.com/8LXJnzoXNf
— Najam Sethi (@najamsethi) September 5, 2023
மேலும் இந்திய அணி நேபள அணியுடன் மோதும் போதும் போட்டியானது மழை பெய்ததினால் பாதிக்கப்பட்டது. இருந்த போதிலும் எப்படியோ போட்டி நடந்து முடிந்து தற்போது இந்தியா சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்து மீண்டும் பாகிஸ்தான் அணியுடன் மோத இருக்கிறது. இந்நிலையில் தான் இந்தியா vs பாகிஸ்தான் போட்டியின் போது ஹம்பந்தோட்டாவில் 40 சதவிகித மழைக்கான வாய்ப்பும் அதே நாளன்று கொழும்புவில் 90 சதவிகிதம் மழைக்கான வாய்ப்பும் இருப்பதாக கூறப்படுவதினால் ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர்.



