உலக ரசிகர்கள் அனைவரும் காத்திருந்த ஒருநாள் உலக கோப்பை 2023 தொடரானது தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த போட்டியில் ஏற்கனவே பல அணிகள் 3 போட்டிகளை விளையாடிய நிலையில் அவர்களின் பலம் எனது பலவீனம் எனது என்பது குறித்து நன்றாக தெரிந்து வைத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த உலக கோப்பையில் தொடர்ந்து மூன்று முறை வென்ற இந்திய அணியானது இன்று பங்களாதேஷ் அணியை எதிர்கொள்கிறது.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணியானது பேட்டிங் செய்ய தேர்வு செய்தது. ஆனால் இந்த போட்டியில் கேப்டன் சகீப் அல் ஹாசன் இல்லை. மேலும் கடந்த சில போட்டிளில் பங்களாதேஷ் அணியானது கொஞ்சம் தடுமாறி வருகிறது. சொல்லப்போனால். முதல் போட்டியை தவிர பங்களாதேஷ் அணியானது 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது. இதனால் இந்த போட்டியை வென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் பங்களாதேஷ் அணி இருக்கிறது.
இந்நிலையில் முதல் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணி தொடக்கத்தில் கொஞ்சம் தடுமாறினாலும், பின்னர் அதிரடியாக விளையாட ஆரம்பித்தனர். பங்களாதேஷ் அதிகபட்சமாக ரிட்டன் தாஸ் 66 ரன்களும், ஹாசன் 51 ரன்களும், மஹ்மத்துல்லா 46 ரன்களும் எடுத்தனர் இறுதியில் பங்களாதேஷ் அணி எட்டு விக்கெட்டுகளை இழந்து 256 ரன்களை குவித்தது. இந்திய அணியின் சார்பில் பும்ரா, சிராஜ், ரவீந்திர ஜடேஜா தலா இரண்டு விக்கெட்களையும் தாகூர்,குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டுகளையும் விழித்தனர்.

இந்த ஸ்கோர் இந்தியா அணிக்கு சற்று சவாலான ஸ்கோராக தான் இருக்கின்றது.257 ரன்களை இலக்காகக் கொண்டு களம் இறங்கிய இந்திய அணி ஆரம்பத்தில் நல்ல தொடக்கத்தை கொடுத்து 4 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 28 ரன்களை குவித்துள்ளது. இறுதியில் இந்திய 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த வெற்றிக்கு பிறகு பேசிய பங்களாதேஷ் அணியின் கேப்டன் நஜ்மல் சான்டோ தோல்விக்கான காரணம் குறித்து பேசியிருந்தார்.
அவர் கூறுகையில் “இந்தியா எப்போதும் கிரிக்கெட் விளையாடுவதில் நல்ல வலுவான அணி என்பதை இன்று காட்டியுள்ளனர். விளையாடும் அனைத்து அணிகளுமே நல்ல அணிகள் தான். நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடவில்லை என்று நினைக்கிறேன். வருங்காலங்களில் சிறப்பாக விளையாடுவோம் என்று நம்புகிறேன். சாகிப் காயத்திலிருந்து கிட்டத்தட்ட குணமடைந்துள்ளதால் அடுத்த போட்டியில் விளையாடுவார்

எங்களது அணியில் தன்சித் சிறப்பாக பேட்டிங் செய்தது போலவே பந்துவீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால் பேட்டிங்கில் நாங்கள் ஃபினிஷிங் செய்யவில்லை என்பதை பிரச்சினையாகும். குறிப்பாக லிட்டன் தாஸ் இன்னும் சற்று அதிக நேரம் விளையாடியிருந்தால் இது வித்தியாசமான போட்டியாக இருந்திருக்கும். அவரைப் போலவே பேட்டிங் துறை பொறுப்புடன் விளையாடியிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் பங்களாதேஷ அணியின் கேப்டன் நஜ்மல் சான்டோ.



