சமீபத்தில் வரலாற்று சிறப்ப்புமிக்க ஆஷஸ் தொடரானது பரபரபபக நடைபெற்று நிறைவடைந்தது. இந்த போட்டியில் முதலில் 2 போட்டிகளில் தோல்வியை தழுவிய இங்கிலாந்து அணியானது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக இங்கிலாந்து அணியின் பாஸ் பால் முறை குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வல்லுனர்களும், ஜாம்பவான்களுமே எதிர்மறை கருத்துக்களை தெரிவித்தனர். இது இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய அடியாக இருக்கும் என்று அனைவருமே நினைத்தார்கள்.
ஆனால் 3 வது போட்டியில் அதிரடியாக விளையாடிய இங்கிலாந்து அணியானது கம்பேக் கொடுத்து வெற்றி பெற்றது. நான்காவது போட்டியிலும் அப்படித்தான் அதிரடியாக விளையாடியது, ஆனால் மழை அனைத்தையும் கெடுத்து போட்டியானது டிராவானது இருந்த போதிலும் மழை பெய்யவில்லை என்றார் அந்த போட்டியில் இங்கிலாந்து வெற்றியடைந்திருக்கவே வாய்ப்பு இருந்தது. மேலும் 5 போட்டியிலும் மாலை பெய்தாலும் இங்கிலாந்தின் தரமான பந்துவீச்சு காரணமாக அந்த போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
இதனால் இந்த வருட ஆஷஸ் தொடரானது டிராவனது. இதனை தொடர்ந்து தற்போது இங்கிலாந்து அணியானது இந்தியாவையும் வீழ்த்த தனக்கு நம்பிக்கை இருப்பதாக கூறினார். ஆனால் இந்தியாவை பொறுத்தவரையில் இங்கு அஸ்வின், ஜடேஜா, அக்சர் பட்டேன் போன்ற டெஸ்ட் போட்டிகளில் தரமான சுழற் பந்துவீச்சாளர்கள் இருக்கின்றனர். எனவே இவர்களை அவர்களது மண்ணிலேயே எதிர்கொவது என்பது இங்கிலாந்து அணிக்கு மிகவும் சவாலான காரியமாக இருக்கும் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான நாசர் ஹுசைன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கொடுத்திருந்த பேட்டியில் “இங்கிலாந்து அணியின் பஸ்பால் முறையை ஒரு பக்கம் வேலை செய்து விட்டு மற்றொரு பக்கம் நகர்ந்து விட்டதாக அவர்கள் சொன்னார்கள். அதைத் தொடர்ந்து அதே விமர்சனங்கள் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் தொடர்களிலும் இருந்தன. அந்த வரிசையில் தற்போது அடுத்த சவால் இங்கிலாந்து அணிக்கு இந்தியாவில் காத்திருக்கிறது
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்வது மிகவும் சவாலான ஒரு காரியம். எனவே இத்தொடரில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக பஸ்பால் என்ற போட்டி உருவாகிறது. குறிப்பாக அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல் ஆகியோரை எதிர்கொள்வதை பார்ப்பது சிறப்பாக இருக்கும். அதே போல இந்தியாவுக்கு எதிராக வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டரசன் நல்ல சாதனைகளை படைத்துள்ளார்.

ஏற்கனவே சுமார் 700 விக்கெட்களை எடுத்துள்ள அவர் மீண்டும் வலைப்பயிற்சிக்கு சென்று இத்தொடருக்காக இப்போதே தயாராக துவங்கியுள்ளது நல்ல அறிகுறியாகும். குறிப்பாக ப்ராட் இல்லாத சூழ்நிலையில் அவருடைய அனுபவம் இந்தியாவில் முக்கியமாகும். ஆனால் கிறிஸ் ஓக்ஸ் வெளிநாட்டில் சிறப்பாக செயல்படாததால் வாய்ப்பு பெறுவாரா என்பதை பார்ப்போம். மற்ற வீரர்கள் இல்லாத நிலையில் இந்தியாவில் அசத்துவதற்கு ஜேம்ஸ் ஆண்டர்சன் அனுபவம் தேவை என்றார் நாசர் ஹுசைன்.




