உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக தொடங்கி பெற்று வருகிறது. அதில் நேற்று 35 போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் டெல்லி உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த ஐபிஎல்லில் அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டி இது தான். டெல்லி அணி தொடர் தோல்வியில் இருந்து மீண்டு வர இன்றைய போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது.

இருப்பினும் டெல்லி அணியின் குல்தீப் யாதவ் மட்டும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். ந்த போட்டியிலும் ஆரம்பத்தில் பல சாதனைகள் உடைக்கப் பட்டது. அது என்னவென்று பார்த்தல் 5 ஓவர்களில் 100ரன்களுக்கு மேல் அடித்ததும் அதே போல் பவர்ப்ளே ஓவர் முடிவில் 120 ரன்களையும் பதிவு செய்து சாதனை செய்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார் அது அவர்களுக்கு சாதகமாக அமையவில்லை. ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 266 ரன்களை அடித்து இருந்தது.
இதில் அதிகபட்சமாக ஹெட் 89 ரன்களும் ஷபாஸ் அகமது 59 ரன்களும் அபிஷேக் ஷர்மா 46 ரன்களையும் அடித்து இருந்தனர். ல்லி அணி சார்பில் குல்தீப் 4 விக்கெட்டுகளையும் அக்சர் மற்றும் முகேஷ் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர். அதன் பின் 267 என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணி ஆரம்பத்தில் இருந்து தங்களது அதிரடி பேட்டிங்கை காட்டி இருந்தனர். இருப்பினும் அவ்வபோது இடையில் விக்கெட்டுகளை இழந்து வந்தனர். இறுதியில் அவர்களால் ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது.

எனவே ஹைதராபாத் அணி ரன்களில் வேரடி பெற்றது. இதில் டெல்லி அணியின் அதிக பட்சமாக ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் 65 ரன்களையும் போரேல் 42 ரன்களையும் அடித்து இருந்தனர். சன்ரைசர்ஸ் அணி சார்பில் மார்ந்கண்டே 2 விக்கெட்டுகளையும் நிதிஷ் ரெட்டி, நடராஜன், புவனேஸ்வர் குமார் மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர். கடைசி ஓவர் வரை போராடிய நிலையிலும் டெல்லி அணி ஹைதராபாத் அணியிடம் தோல்வியை தழுவியது இது குறித்து புவனேஸ்வர் கும கூறுகையில்,
இவ்வளவு ரன்களை நீங்கள் பாதுகாக்கும் போது, நாங்கள் நிறைய ரன்களுக்கு செல்வோம் என்பதை ஏற்றுக்கொண்டோம். எங்கள் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த விரும்பினோம். நான் விக்கெட்டுகளை எடுக்கத் தொடங்குவதற்கு சிறிது நேரம் முன்பு விஷயங்கள் சரியாக நடக்கத் தொடங்கும். அவர் (நடராஜன்) தனது யார்க்கர்களுடன் எவ்வளவு நன்றாக இருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும், நடராஜன் ஒரு பணிவான மனிதர். அவரது உழைப்பு எப்போதும் அங்கீகரிக்கப்படவில்லை அவர் கடினமாக உழைக்கும் ஒரு அமைதியான பையன். அவர் உண்மையிலேயே ஒரு மேட்ச்வின்னர். பல வருடங்களில் எங்கள் பேட்டிங் இவ்வளவு சிறப்பாக க்ளிக் செய்திருப்பது இதுவே முதல் முறை, ஒரு பந்துவீச்சு பிரிவாக நாங்கள் சற்று பின் இருக்கை எடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

220-200 போன்ற ஸ்கோர் குறைவாக இருப்பதைப் போல நாங்கள் உணருவோம், ஆனால் பேட்டிங் யூனிட் கிளிக் செய்வது மிகவும் நல்லது. நிபந்தனைகள் ஒரு பொருட்டல்ல, அவர்கள் வலையில் கூட அதையே செய்கிறார்கள். வலைகளில் பந்து வீசும்போது பந்து எங்கு செல்கிறது என்பதைப் பற்றி நீங்கள் அதிகம் யோசிப்பதில்லை ஆனால் ஆம், அவர்கள் எங்களுக்கு சில நல்ல பயிற்சிகளைத் தருகிறார்கள், குறிப்பாக அபிஷேக் மற்றும் டிராவிஸ் ஹெட். பந்துவீச்சு என்பது உங்கள் போட்டிகளை வெல்லும் ஒன்று, அதை யார் சொன்னார்கள் என்று தெரியவில்லை, ஆனால் அவர்கள் “பேட்டிங் வின்ஸ் யூ ஸ்பான்சர்ஷிப்ஸ் மற்றும் பந்துவீச்சு உங்களுக்கு சாம்பியன்ஷிப்பை வெல்லும்” என்று சொன்னார்கள், இது ஒரு சிறந்த வாசகம் என்று நான் நினைக்கிறேன். நாங்கள் எங்கள் திட்டங்களைச் செயல்படுத்திய விதம் அருமை என்றும் அவர் கூறினார்





