500வது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்த அஷ்வின். இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 தொடர்களை கொண்ட டெஸ்ட் போட்டியில் இரண்டில் 1 – 1 என்ற கணக்கில் இரு அணிகளும் தொடரை சமன் செய்துள்ளது. மூன்றாவது போட்டியானது நேற்று ராஜ்கோட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் இந்திய அணிக்கு பெரிய அடியாக முதல் செஷன்னில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி இருந்தது.

அதன் பின் ரோஹித் ஷர்மாவும் ஜடேஜாவும் இணைந்து இந்திய அணிக்கு சிறப்பான பார்ட்னர் ஷிப் அமைத்து இருந்தனர். அதன் பின் ரோஹித் ஷர்மாவும் ஆட்டமிழந்து வெளியேற அறிமுக நாயகன் சர்ப்ராஸ் கானுடன் இணைந்து ஜடேஜா ரன்களை குவித்து வந்தனர். எதிர்பாராத விதமாக சர்ப்ராஸ் கான் ரன் அவுட்டாக ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின் இன்றைய நாள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 326 ரன்களை குவித்து இருந்தது. இத்தகைய ரன்களை குவிக்க இந்திய அணிக்கு பக்கபலமாக இருந்தது ரோஹித் ஷர்மாவும் ஜடேஜாவும் மற்றும் சர்ப்ராஸ் காணும் தான். தனது அறிமுகப்போட்டியிலே இந்திய அணிக்காக அதிவேகமாக அரை சதம் அடித்த வீரர் என்ற வாரலற்று சாதனையும் அவர் படைத்தார்.

இந்திய அணியில் சார்பில் ஆரம்பத்திலே ஜெய்ஸ்வால் 10 ரன்களிலும் கில் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்து வெளியேறினார்.அதன் பின் படிதாரும் 5 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின் சிறப்பாக விளையாடி வந்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா 131 ரன்களிலும் அறிமுக நாயகன் சர்ப்ராஸ் கான் 62 ரன்ககளிலும் ஆட்டமிழந்தனர். குல்தீப் 4 ரன்களிலும் ஜடேஜா 112 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 445 ரன்களை அடித்து இருந்தது.
அதன் பின் பேட்டிங் செய்ய வந்த இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடி வருகிறது. அதில் முதல் விக்கெட்டை (க்ராலி) வீழ்த்தி இருந்தார். அஷ்வின் அதன் மூலம் தனது 500வது டெஸ்ட் விக்கெட்டையும் அவர் பதிவு செய்து இருந்தார். அணில் குப்ம்ளேக்கு பிறகு 500வது விக்கெட்டை வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். அது மட்டுமல்லாமல் முத்தையா முரளி தரனுக்கு பின் அதிவேகமாக 500 விக்கெட்டுகளை பதிவு செய்த இரண்டாவது வீரர் என்ற பெருமையும் அவர் பெற்றார்.
Nathan Lyon congratulating Ravi Ashwin on 500 Test wickets.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) February 16, 2024
– The mutual respect between Ash and Lyon. 👏pic.twitter.com/OgQ4paxgJl
அஷ்வினின் 500 வது விக்கெட்டுக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றையும் அவர் பதிவு செய்து இருந்தார். அதில் அவர் கூறுகையில் 500 டெஸ்ட் விக்கெட்டுகளை கடந்த ரவி அஸ்வினுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இது பார்க்க நம்பமுடியாத பயணம். நீங்கள் பந்து வீசும் விதம் மற்றும் திறமை நிலை ஆகியவற்றில் உங்களுக்கு மரியாதை. உங்களுக்கு எதிராகப் போட்டியிடுவதும் உங்களிடமிருந்து கற்றுக்கொள்வதும் ஆச்சரியமாக இருக்கிறது. இன்னும் நிறைய விக்கெட்டுகள் வரும் நண்பா என்றும் பதிவு செய்து இருந்தார். இன்றைய நாள் முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்களை குவித்துள்ளது.




