கிரிக்கெட்டில் எது சுவாரசியமான போட்டி என்றால் அனைவருக்கும் முதலில் நியாபகம் வருவது இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி தான். கஏனெனில் அண்டை நாடுகளான இவ்விரு அணிகளும் கிரிக்கெட்டை விளையாட்டாக பார்க்காமல் அதை கௌரவமாக கருதி ஆக்ரோசத்துடன் முழு திறமையை வெளிப்படுத்தி நேருக்கு நேர் மோதிக் கொள்வார்கள் என்பதாலேயே இந்தியா vs பாகிஸ்தான் போட்டிகள் உலகப்புகழ் பெற்றதாக இருக்கிறது.

அந்த வரிசையில் கடந்த 2005ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 4 – 2 என்ற கணக்கில் வென்ற பாகிஸ்தான் கோப்பையை வென்றது. அந்த தொடர் முழுவதுமே மிகச் சிறப்பாக செயல்பட்ட பாகிஸ்தான் வீரர் நவீத்-உல்-ஹசன் தொடர் நாயகன் விருது வென்று இந்தியாவை வீழ்த்துவதற்கு முக்கிய பங்காற்றினார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அவர் சேவாக்கை தான் எப்படி அவுட் செய்தேன் என்பது குறித்து பேசினார்
நவீத் உல் ஹசன் :
அவர் கூறுகையில்” ஒரு போட்டியில் சேவாக் 85 ரன்களில் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அதே தொடரில் தான் ஷாஹித் அப்ரிடி சதமடித்திருந்தார். இருப்பினும் முதலிரண்டு போட்டிகளில் இந்தியா அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றதால் நாங்கள் 2 – 0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே பின்தங்கினோம். 3வது போட்டியில் சேவாக் அடுத்தடுத்த சிக்ஸர்களாக பறக்க விட்ட அவர் இந்தியா 300 ரன்கள் நெருங்க உதவினார். அந்த வகையில் எங்கள் பவுலர்கள் அனைவரும் அவரிடம் அடி வாங்கினர்.
🧢 9 Tests, 74 ODIs and 4 T20Is for Pakistan
— Pakistan Cricket (@TheRealPCB) February 28, 2023
🏏 133 wickets and 781 runs in international cricket
Happy birthday Rana Naved-ul-Hasan 🎂 pic.twitter.com/ukLat9vMYg
அப்போது நான் கேப்டன் இன்சமாமிடம் எனக்கு ஒரு ஓவர் கொடுங்கள் என்றேன். அவரும் அனைத்து பவுலர்களும் அடி வாங்குவதால் நீயும் ஒரு ஓவர் முயற்சித்துப் பார் என்றார். அதில் நான் வீசிய முதல் மெதுவான பவுன்சர் பந்தை சேவாக் கணிக்க தவறி அடிக்காமல் விட்டார். அப்போது அவருடைய அருகே சென்ற நான் “உங்களுக்கு எப்படி விளையாடுவது என்பது தெரியவில்லை. ஒருவேளை நீங்கள் பாகிஸ்தானில் இருந்திருந்தால் சர்வதேச அணையில் விளையாடியிருக்க மாட்டீர்கள்” என்று சொன்னேன்.
அதற்கு அவரும் சில வார்த்தைகளை சொன்னார். ஆனால் அதையும் தாண்டி அவருக்கு என்னுடைய வார்த்தைகள் பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தினேன். அதைத்தொடர்ந்து அடுத்த பந்தை வீசுவதற்கு முன்பாக இன்சாமிடம் அவர் இப்போது அவுட்டாவார் பாருங்கள் என்று சொன்னேன். அதே போலவே பேக் ஆஃப் தி ஹேண்ட் வாயிலாக நான் வீசிய மெதுவான பந்தை சேவாக் அதிரடியாக அடிக்க முயற்சித்து அவுட்டானார்.

அதுவே இறுதியில் அந்த போட்டியில் நாங்கள் வெல்வதற்கு முக்கிய காரணமாக அமைந்தது” என்று கூறினார். இருப்பினும் அவர் குறிப்பிடும் தொடரில் சேவாக் எந்த போட்டியிலும் 85 ரன்களில் அவுட்டாகவில்லை. மாறாக 2வது போட்டியில் யாராலும் மறக்க முடியாத வகையில் தோனி 148 (123) ரன்கள் எடுத்த நிலையில் சேவாக் அவரிடம் 74 (40) ரன்களில் அவுட்டானார். இருப்பினும் அந்த போட்டியில் இந்தியா 58 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது குறிப்பிடத்தக்கது.




