ஐபிஎல் 16ல் 10வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி சன்ரைசஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டன. இப்போட்டியானது லக்னோவில் ஏக்னா மைதானத்தில் நடைபெற்றது அதில் டாஸ் வென்ற சன்ரைசஸ் அணி முதலில் பேட்டிங் விளையாட முடிவு செய்தது.அதன் படி பேட்டிங் ஆடிய சன்ரைசஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்களை மட்டுமே எடுத்தது. அணியின் ராகுல் த்ரிபாதி அதிகபட்சமாக 41 பந்துகளில் 35ரன்களை அடித்தார்.

அதிகமா எதிர்பார்க்கப்பட்ட யாரும் இந்த போட்டியில் ஜொலிக்கவில்லை .பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அணியின் கேப்டன் எய்டன் மர்க்ரம் அவர் முதல் பந்திலே க்ருனால் பண்டியாவிடம் ஸ்டெம்ப் அவுட்னார். சன்ரைசஸ் ஹைதராபாத் அணி கடந்த 2 வருடங்களாக 8 இடங்களிலே ஐபிஎல் சீசனை நிறைவு செய்து வருகின்றன .அந்த சோகங்கள் தொடர்ந்து வருகிறது.ஐபிஎல் 2023 விளையாடிய இரண்டு போட்டிகளிலும் சன்ரைசஸ் அணி தோல்வியை மட்டுமே கண்டு வருகிறது.முதல் போட்டியில் கேப்டன் எய்டன் மர்க்ரம் இல்லாமல் விளையாடி தோற்றது.

அதன் பின் இந்த போட்டியில் எய்டன் மர்க்ரம் அணிக்கு திரும்பினார். இருந்த போதும் அந்த அணியால் வெற்றியை பெற முடியவில்லை. ஐபிஎல் 2023 இல் போட்டிகளில் இன்று மிகவும் பரபரப்பான ஒன்று விளையாடப்பட்டது. லக்னோ ஏக்னா ஸ்டேடியத்தில் நடைபெற்ற லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எளிதாக விழ்த்தி வெற்றி பெற்றது.
लखनऊ की जीत के सेलिब्रेशन का वीडियो वायरल pic.twitter.com/sO8Q6ZInIV
— binu (@sachhikhabars) April 7, 2023
மேற்கிந்திய தீவுகளின் அதிரடி பேட்ஸ்மேன் நிக்கோலஸ் பூரன், தமிழகத்தின் நட்சத்திர பௌலர் நடராஜனின் பந்து வீச்சில் ஒரு அற்புதமான சிக்ஸரை அடித்து லக்னோவை வெற்றியின் வாசலில் கொண்டு சென்றார். அந்த வெற்றிக்குப் பிறகு, நிக்கோலஸ் தனது எதிர் அணியின் வீரர்களை கட்டிப்பிடிக்கத் தொடங்கினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.





