மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியாது பல தொடர் போட்டியில் விளையாடி வருகிறது.இடஙக சுற்றுப்பயணத்தில் ஏற்கனவே இந்தியா டெஸ்ட் போட்டியில் 1-0 என்ற கணக்கிலும் ஒருநாள் போட்டியில் 2-1 என்ற கணக்கிலும் வெற்றி பெற்ற நிலையில் இந்திய அணியானது தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் அற்புதமாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது வெற்றியை பதிவு செய்தது.
Nicholas Pooran continues his mad form in T20Is! 💪
— OneCricket (@OneCricketApp) August 6, 2023
Only dealing in 4s and 6s 🚀#CricketTwitter #NicholasPooran #WIvIND pic.twitter.com/0eJRRkBF7q
இந்நிலையில் இரண்டாவ்து போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணியானது பேட்டிங்கை தேர்வு செய்தது. முக்கிய பேட்ஸ்மான்கள் ஆட்டமிழந்த நிலையில் திலக் வர்மா மட்டுமே நிலையாக நின்று ரன்களை சேர்த்து கொடுத்தார். ஆனால் ஆனால் அவர் ஆட்டமிழந்த பிறகு வந்த பேட்ஸ்மேன்கள் பெரிதா ரன்களை எடுக்காத நிலையில் இந்திய அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனையடுத்து 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது. தொடக்கத்தில் 2 விக்கெட்டுகளை இழந்தது, அதற்கு பிறகு 4வது ஓவரில் ஆதிரடி வீரர் கையில் மேயர்ஸ் ஆட்டமிழந்தததால இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் ஆனால் பின்னர் கைகோர்த்து கொண்ட நிகோலஸ் பூரன் மற்றும் கேப்டன் ரோவ்மன் பவல் இருவரும் இணைந்து அற்புதமாக விளையாடி இந்தியாவின் பந்துவீச்சாளர்களின் பந்துகளை நாலாபுறமும் பறக்க விட்டனர்

மேலும் நிகோலஸ் பூரன் 50(29) அரை சதம் விளாசினார். அதற்கு பின்னர் கேப்டன் ரோவ்மன் பவல் 21(19) ஆட்டமிழந்தார், மறுபுறம் கலக்கி கொண்டிருந்த பூரன் 67(40) ரன்களில் ஆட்டமிழந்தாலும் அது வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற போதுமானதாக இருந்தது. மேலும் அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. இந்நிலையில் நிலையில் தான் போட்டிக்கு பிறகு பேசிய நிகோலஸ் பூரன் தனக்கு இப்படி பேட்டிங் செய்வதில் எந்த பிரச்னையும் இல்லை என்று கூறியுள்ளார்.

ஆவர் கூறுகையில் ” சிறப்பான பேட்டிங் செய்ததில் எனக்கு மகிழ்ச்சி. இது பர்பிள் பேட்ச் அளவிற்கு கிடையாது. வெற்றி பெறுவதற்காக நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம். அது எனக்கு நன்றாகவே போய்க்கொண்டிருக்கிறது. நாங்கள் தொடர்ந்து தோற்றதைக் கண்டேன். கேப்டன் பதவியையும் கொடுத்துவிட்டு இப்போது விளையாட்டை ரசித்து விளையாடுகிறேன். ரசிகர்களையும் மகிழ்விக்க விரும்புகிறேன். விளையாட்டும் சரியாக எனக்கு சென்று கொண்டிருக்கிறது.
2 ரன்களுக்கு இரன்டு விக்கெட்டுகள் என்பது என்னை பெரிதாக பாதிக்காது. அது நீங்கள் எப்படி விளையாடுகிறீர்கள், எப்படி போட்டியை சரியாக கொண்டு செல்கிறீர்கள் எனபதில் தான் இருக்கிறது. இந்த விக்கெட் கொஞ்சம் சரியாக இருப்பதாக எனக்கு தோன்றியது. இது போன்ற மைதானத்தில் ஏற்கனவே நாங்கள் விளையாடி இருக்கிறோம். அதோடு இந்திய அணியின் பந்துவீச்சாளர்களும் எனக்கு ஆப் வாலிஸ் மற்றும் புல்டாசாக பந்துகளை வீசுவார்கள் அதிலிருந்து ரன்களை எடுத்து கொள்ளவேண்டியது தான் என்றார் நிகோலஸ் பூரன்.





