இந்திய அணி இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவி இருந்தாலும் இந்திய அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான அடுத்த டி20 தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றது. கடந்த சில மாதங்களாக நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி அனைத்து லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்ற நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணியின் ரசிகர்கள் எதிர்பாரத நிலையில் ஆஸ்திரேலிய அணி இறுதிப் போட்டியில் வெற்றி கோப்பையை கைப்பற்றியது.

இந்திய அணியின் தோல்விக்கு பிறகு ஆஸ்திரேலியா அணியுடன் ஐந்து டி20 தொடர்களை விளையாடி அதில் இந்திய அணி 4-1 என்று வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்கு ரின்கு சிங் ஒரு முக்கிய காரணம் என்று சொல்லலாம். இதில் இந்திய அணியின் கேப்டனாக சூரியகுமார்யாதவ் செயல்பட்டு இருந்தார். இந்திய அணி தற்போது அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் உலகக்கோப்பை 2024 ஆம் ஆண்டுக்கு இந்திய அணியின் இளம் வீரர்களை தயார்படுத்தி வருகிறது.
இதில் இந்திய அணியின் இளம் வீரர்கள் சிறப்பாகவே செயல்பட்டு தங்களது இடத்தை உறுதிப்படுத்திவருகின்றனர். இந்திய அணியில் ருதுராஜ், ஜெய்ஸ்வால், ஜிதேஷ் ஷர்மா மற்றும் ரின்கு சிங் சிறப்பாகவே ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். எனவே இவர்களுக்கு இன்று நடக்க வுள்ள போட்டியில் கட்டாயம் அணியில் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் கேப்டன் சூர்யகுமார் யாதவிற்கு ஏற்பட்டுள்ளது.
ருதுராஜ் கெய்க்வாட் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 டி20 போட்டிகளிலும் அவர் சிறப்பாகவே விளையாடி இருந்தார். அவர் முதல் போட்டியில் எதிர்பாராத விதமாக ஒரு பந்தை கூட சமாளிக்காமல் ரன் அவுட்டாகி வெளியேறினார். அதன் பின் அவர் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு ரன்களை குவித்து இருந்தார்.அவர் 159 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 138 ரன்களை அவர் குவித்து இருந்தார். இன்றைய போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த ருதுராஜ் சில கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.

வந்த முதல் பந்திலே அதிரடியை காட்டுவது ஜெய்ஸ்வால் தான். அவர் அதிரடியான ஆட்டக்காரர். அவர் என்ன நடந்தாலும் அவர் தனது அதிரடி ஆட்டத்தை கைவிட மாட்டார். அணிக்கு சில அபாயகரமான சூழ்நிலை வரும் போது அணிக்கு என்ன தேவையோ அதை அப்போது சரியாக செய்வார். ஒரு முனையில் ஜெய்ஸ்வால் போன்ற அதிரடி ஆட்டக்காரர் விளையாடும் போது மறுமுனையில் நான் நிதானமாக விளையட்டுவது மிகவும் முக்கியமானது. தென்னாப்பிரிக்காவில் சவாலான சூழ்நிலைகளை எதிர்கொள்வதில் மிகவும் நம்பிக்கை உள்ளது என்றும் கூறினார்.




