சில நாட்களாக இணையத்தில் பகிரப்பட்டு வரும் செய்தி என்றால் அது இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயரின் பெயர்கள் சம்பளம் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டது தான் பிசிசிஐ நேற்று மத்திய ஒப்பந்தம் 2023 மற்றும் 2024 காண பெயர்களை வெளியிட்டது. அதில் சில முக்கிய வீரர்களின் பெயர்களை மத்திய ஒப்பந்தத்தில் இருந்து நிக்கியது தான். அதில் குறிப்பாக ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் பெயர்கள் தான் மிகவும் பேசப்பட்டு வந்தாலும் அதற்கு அடுத்தபடியாக சாஹல் புஜாரா ஷிகர் தவான் உமேஷ் யாதவ் ஆகியோரின் பெயர்களும் அந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

இஷான் கிஷான் தென் ஆப்பிரிக்கா எதிரான டெஸ்ட் தொடரின் போது மன சோர்வு காரணமாக அணியிலிருந்து விலகினார். ஆனால் அதன் பின்னர் அவர் ரஞ்சி டிராபியில் மத்திய பிரதேச அணிக்காக விளையாடாமல் ஐபிஎல் 2024 பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். இதற்கு பிசிசிஐ எப்போது ஒரு எச்சரிக்கை ஒன்றையும் அளித்து இருந்தது. ரஞ்சி ட்ரோபியில் விளையாட வேண்டும் என்றும் கூறியிருந்தது. இஷான் கிஷன் அதனை சற்றும் மதிக்காமல் அவ்வாறு தொடர் ஐபிஎல்காக பயிற்சி மேற்கொண்டு வந்திருந்தார்.
இது குறித்து BCCI கூறுகையில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது குறித்து சமிபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் வீரர்கள் முதல் வகுப்பு போட்டிகளில் வீரர்கள் தங்களது திறமையை நிரூபித்துகொண்டு மீண்டும் அணியில் வந்து விளையாடலாம். கிரிக்கெட் என்பது அனைத்து வீரர்களுக்கும் போதுவானது என்றும் கூறியிருந்தது. இது குறித்து சமிபத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சில வற்றை கூறியிருந்தார்.

அவர்களது நடவடிக்கை குறித்து கங்குலி கூறுகையில், அவர்கள் சிவப்பு பந்து மற்றும் வெள்ளை பந்து இரண்டையும் விளையாட முடியும். ஐபிஎல் வாழ்க்கையும் முதல் தர கிரிக்கெட்டிலும் சேர்ந்து நிகழலாம். முதல் தர கிரிக்கெட் முடிந்து, ஐபிஎல் தொடங்க இன்னும் ஒரு மாதம் உள்ளது. எனக்கு எந்த பிரச்சனையும் தெரியவில்லை. பல உயர்தர வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் ஒயிட்-பால் கிரிக்கெட் விளையாடுகிறார்கள். நீங்கள் கோலி, ரோஹித், பும்ரா, கேஎல் ராகுல் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோரைப் பார்க்கிறீர்கள், ”என்றும் கங்குலி கூறினார்.

“உலக அரங்கில், மிட்செல் மார்ஷ் இருக்கிறார். அவர் இப்போது ஆஸ்திரேலியாவின் முதன்மை சிவப்பு பந்து வீரர். ஹாரி புரூக் சிவப்பு பந்து கிரிக்கெட் விளையாடுகிறார். டேவிட் வார்னர் நிறைய டெஸ்ட் கிரிக்கெட் விளையாடினார், ஆனால் அவர் சிறந்த வெள்ளை பந்து வீரர்களில் ஒருவராகவும் இருந்தார். எனது நாட்களில் கூட, சச்சின், ராகுல் மற்றும் நானும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடினோம், பின்னர் வெள்ளை பந்து கிரிக்கெட் விளையாடினோம். நீங்கள் ஒன்றை விளையாடலாம், மற்றொன்றை விளையாட முடியாது என்று கூறுவதற்கு எந்த காரணமும் இல்லை




