உலக கோப்பை போட்டியானது வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெற இருக்கிறது. இதனால் இந்திய அணி இதில் வெற்றி பெற்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ஏனென்றால் கடந்த உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியில் தோல்வியை தழுவிய இந்தியா இந்த போட்டியிலும் தோல்வியை தழுவியது என்றால் கண்டிப்பாக பயிற்சியாளர், கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் மீதம் இருக்கும் அணியின் வீரர்களின் மீது பெரிய விமர்சனங்கள் எழும்.

இந்நிலையில் இந்திய அணி உலக கோப்பைக்கு முன்னதாக சில ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இது கண்டிப்பாக இந்திய அணிக்கு நல்ல பயிற்சி ஆட்டமாக இருக்கும். அப்படிப்பட்ட நிலையில் தான் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்தியா பின்னர் ரோஹித் மற்றும் விராட் இல்லாமல் 2வது போட்டியில் களமிறங்கி தோல்வியை தழுவியது. மேலும் இஷான் கிஷன் தொடக்க வீரராகவும் களமிறங்கினார். இதனால் பல விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் தான் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா இது குறித்து பேசியுள்ளார்.
அவர் கூறுகையில் இவர்கள் “தற்போது இந்திய அணியில் வீரர்களை சோதனை செய்வதனை பார்த்தால் எனக்கு 2022 ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை டி 20 தொடர் தான் நியாபகம் வருகிறது. இதனால் தான் எனக்கு கொஞ்சம் பயமாக இருக்கிறது. உலகக் கோப்பையில் இஷான் கிஷன் பேட்டிங்கைத் தொடங்க வாய்ப்பில்லை. அப்போது ஏன் அவரை துவக்க வீரராக களமிறக்கி பரிசோதனை செய்கிறீர்கள். இஷான் கிஷன் மற்றும் ஷுப்மான் கில் ஆகியோர் பேட்டிங்கைத் தொடங்கினால், ரோஹித் மிடில் ஆர்டரில் இறங்கினால் நான் கண்டிப்பாக ஆச்சரியப்படுவேன்.

எனக்கு இதில் சிறிதும் உடன்பாடு இல்லை. விராட் கோலி 3வது இடத்தில் இருந்து கீழே இறங்குவது நான் வேண்டாம் என்றுதான் கூறுவேன். இடது-வலது சேர்க்கையால் கில்-இஷானுடன் ஒரு நல்ல ஜோடியாக் இருக்கும் இருக்கும் என்ற ஒரு எண்ணம் இருக்கிறது. ஆனால் அவரை உலக கோப்பையில் 4 வதாக களமிறக்குவதாக இருந்தால் அவரை தொடக்க வீரராக களமிறங்கி சோதிப்பதில் எந்த அர்த்தமும் கிடையாது என்றார் ஆகாஷ் சோப்ரா.
மேலும் பேசிய அவர் கூறுகையில் “ரோஹித் மற்றும் விராட் எதற்காக ஓய்வெடுத்தார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் அதிகம் கிரிக்கெட் விளையாடவில்லை, ஏனென்றால் WTC இறுதிப் போட்டிக்குப் பிறகு மூன்று வாரங்கள் இடைவெளி இருந்தது மற்றும் இந்தியா-WI டெஸ்ட்களில் ஏழு நாட்கள் மட்டுமே விளையாடினார்கள். அதுவும் ஒரு டெஸ்ட் இன்னிங்கில் பாதிதான் விளையாடினார்கள். இப்படி இருக்கும் அவர்கள் இரண்டவது ஒருநாள் போட்டியில் விளையாடதது ஏன்.

அவர்கள் இருவரும் டி20 போட்டியை விட்டுவிட விரும்பினால் அதில் ஒரு அர்த்தம் இருக்கிறது. ஏனென்றால் இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை இல்லாததால் அது யாரையும் பாதிக்கும் வகையில் இருக்காது. ஆனால் உலக கோப்பைக்கும் இன்னமும் சில காலமே இருக்கும் நிலையில் அவர்கள் இருவரும் விளையாடாதது ஏன் என்று எனக்கு புரியவில்லை. எப்படியும் ரோஹித் மற்றும் கோஹ்லி டி20 போட்டிகளில் இடம்பெறவில்லை. அப்படியிருக்க நீங்கள் ஓய்வெடுக்கும் எண்ணத்துடன் விளையாடவில்லையா என்றார் ஆகாஷ் சோப்ரா.



