சமீபத்தில் நடந்து முடிந்த உலக கோப்பை 2023 தொடரில் இந்திய அணி பெரும் தோல்வியை சந்தித்து. இந்த தோல்வியை யாராலுமே ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனென்றல் இந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி வந்த இந்திய அணி இறுதி போட்டியில் மோசமான தோல்வியை தழுவியது. இந்நிலையில் இந்த தொடர் முடிந்து சில காலம் கழித்தே இந்தியாவுக்கு ஆஸ்திரேலிய அணிக்கு டி20 போட்டியானது நடக்க இருகிறது

இந்த போட்டியில் இந்திய அணியின் சார்பாக இளம் வீரர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். குறிப்பாக கேப்டனாக சூர்யா, மற்றும் துணை கேப்டனாக ருதுராஜ் போன்றவர்களும். மேலும் இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சிவம் துபே போன்ற இளம் வீரர்களும் கலந்து கொள்ள இருக்கும் நிலையில் அவர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா.
அவர் கூறுகையில் “உலகக் கோப்பை அணி தேர்வு செய்யப்பட வேண்டும், எனவே இது உங்களுக்கு ஒரு வாய்ப்பு, அடுத்த உலகக் கோப்பைக்கு முன் உங்களிடம் 25 டி20 போட்டிகள் இல்லாததால் அதிக வாய்ப்புகள் கிடைக்காது. இவற்றை நீங்கள் அதிகம் பயன்படுத்தினால் நல்லது. வாய்ப்புகள் கிடைக்கும் போதே உங்கள் இடத்தை பலப்படுத்துங்கள், இல்லையெனில் நீங்கள் வருத்தப்படுவீர்கள்.

இந்தத் தொடரை நீங்கள் அந்தக் கோணத்தில் பார்த்தால் முக்கியமானது. இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகிய மூன்று தொடக்க ஆட்டக்காரர்களில் யார் தொடங்குவார்கள் என்பது ஒரு பெரிய கேள்வியாக இருக்கும். இது யாருடைய ஒரு மேக் அல்லது பிரேக் தொடராக இருக்கலாம் என்று போட்டியின் போதுதான் தெரியவரும்.

யஷஸ்வி அடித்த ரன்கள் மற்றும் அவர் விளையாடும் விதம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அவர் நிச்சயமாக விளையாட வேண்டும், அவரை விட்டுவிடக்கூடாது என்று நீங்கள் நினைக்கிறீர்கள். இருப்பினும் நீங்கள் அவரை அவுட் செய்யவில்லை என்றால், நீங்கள் இஷான் கிஷானை வெளியேற்றுவீர்களா? அல்லது ருதுராஜ் கெய்க்வாடை வெளியே விட்டுவிடுவீர்களா?
உண்மையில் ருதுராஜ் கெய்க்வாட் துணை கேப்டன். அதனால் அவரை விட்டுவிட முடியாது. எனவே யாரை விட்டுவிடுவீர்கள்? பிறகு சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ரின்கு சிங், மற்றும் சிவம் துபே போன்ற பேட்ஸ்மேன்கள் இறுகின்றனர். அதுவே உங்கள் பேட்டிங் வரிசையை வலுவாக்குகிறது. இஷான் விளையாடினால் ஜிதேஷ் சர்மா விளையாட முடியாது என்று கூறியுள்ளார் ஆகாஷ் சோப்ரா.



