உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த உலகக்கோப்பை 2023 தற்போது இந்தியாவில் லீக் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இன்று இறுதி போட்டியுடன் முடிவடைகிறது. நேற்று உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியும் ஆஸ்திரேலிய அணியும் நரேந்திர மோடி மைதானத்தில் விளையாடியது . இந்திய அணி லீக் போட்டிகளில் அனைத்திலும் வெற்றி பெற்று பலம் வாய்ந்த அணியாக நேற்று ஆஸ்திரேலியா அணியுடன் விளையாடியது.

இந்த போட்டியில் இந்தியா துரதிஷ்ட வசமாக பெரும் தோல்வியை தழுவியது. இந்திய அணியின் பேட்டிங் சுமாராகவே இருந்தது. இந்திய அணி இறுதிப் போட்டியில் இது போன்று சொதப்பியது இந்திய ரசிகர்களால் ஏற்று கொள்ள முடியவில்லை. மேலும் ஆஸ்திரேலிய அணியாது 6 முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றி பலம் வாய்ந்த அணியாக இருக்கின்றது. இந்திய அணி லீக் போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் இந்த தோல்வி குறித்து பேசிய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறுகையில் “தொடக்கத்திலேயே இந்தியா ஒரு புள்ளியை விட்டுக் கொடுத்ததாக உணர்கிறேன். ஒருவேளை இந்தியா அவர்கள் விளையாட விரும்பும் ஆடுகளத்தை தேர்வு செய்திருக்கும். சுழற்பந்து வீச்சுக்கு உதவியாக இருக்கும் கருப்பு மண் ஆடுகளத்தை இந்திய அணி தேர்வு செய்தது. இருப்பினும், தொடக்கம் என்பது சற்று தற்காப்பாக இருந்தது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாங்கள் விளையாட வேண்டிய ஆடுகளத்தைப் பற்றி நாங்கள் சிந்திக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் முதலில் பேட்டிங் செய்ய விரும்பினால், ஆடுகளம் உங்களை சுதந்திரமாக விளையாட அனுமதிக்காத ஒன்றாக இருக்கக்கூடாது. உலர்ந்த கருமண் மைத்தனத்தை தேர்ந்தெடுத்தால் உங்கள் சொந்த வலையில் நெகிகளே சிக்கிக்கொண்டீர்கள்.

மேலும் ஆஸ்திரேலிய அணி குறித்து பேசிய அவர் கூறுகையில் “இறுதி போட்டியில் இரண்டு காரணிகளால் இயக்கப்படுகின்றன. முதலாவதாக, குறைவான தவறுகளைச் செய்யும் ஒரு குழு பொதுவாக சிறந்த சூழ்நிலைகளில் தங்களைக் சிறப்பாக வைத்து கொள்கிறது. அவர்கள் அழுத்தத்தை உறிஞ்சும் அணிகள். மற்றவர்கள் பயமின்றி விளையாடத் துணிந்தவர்கள்.
எனவே இவை இரண்டு பெரிய காரணிகள். இந்த இரண்டு காரணிகளையும் நீங்கள் நன்றாகக் கையாண்டால், உங்கள் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது, அது உங்களுக்கு வெற்றியை உறுதி செய்யாது, ஆனால் இன்று இல்லை என்றால் நாளை நீங்கள் வெல்வீர்கள், ஏனென்றால் இவை இருந்தால் நீங்கள் வெற்றியாளர். ஆஸ்திரேலியா அதைச் செய்து காட்டியது என்று கூறியுள்ளார் ஆகாஷ் சோப்ரா.



