ஐசிசி 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலமாக துவங்குகிறது. சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா 2011 போல கோப்பையை வென்று கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்தும் முனைப்புடன் களமிறங்க உள்ளது. அதற்கு தயாராகும் வகையில் ஆகஸ்ட் 30ஆம் தேதி துவங்கும் 2023 ஆசிய கோப்பையில் விளையாடுவதற்கான அணியை இந்தியா வெளியிட்டிருந்தது.

மேலும் இந்த அணியே அதிகபட்சமாக உலக கோப்பை போட்டியிலும் விளையாடும் என்று எதிர்பாக்கப்படுகிறது. மேலும் ஆசிய கோப்பை போட்டிக்கு தேர்வு செய்ய்யப்பட்ட வீரர்களில் ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், வேகப்பந்து வீச்சாளர்களில் பும்ரா, ஷமி , சிராஜ் போன்றவர்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் தான் இந்த அணி குறித்து பேசியுள்ளார் முன்னாள் இந்திய அணியின் வீரரான ஆகாஷ் சோப்ரா.
இந்த விஷயம் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அவர் கூறுகையில் “முகமது சிராஜ் புத்திசாலி. அவர் 24 போட்டிகளில் 20.7 சராசரி மற்றும் 4.78 என்ற எக்கனாமிக் விகிதத்தில் 43 விக்கெட்டுகளை வீழ்த்தியுளார். அந்த நம்பர்கள் பும்ரா மற்றும் ஷமியின் எண்ணிக்கையை விட சிறந்தாக இருக்கிறது. ஆசியாவில் அவரது சராசரி 16.57 ஆகவும் பொருளாதார விகிதம் 4.51 ஆகவும் உள்ளது.

ஆசியாவிற்கு வெளியே உள்ள அவரது நம்பர்களை விடவும் ஆசியாவிற்கு உள்ளே அவரது நம்பர்கள் என்பது மிகவும் சிறப்பாக உள்ளது. எனவே சிராஜுக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் அல்லது பிரசித் கிருஷ்ணா விளையாட முடியுமா என்று பேசிக் கொண்டிருந்தவர்களுக்கு ஒன்றை நான் சொல்லிக்கொள்கிறேன். நீங்கள் அந்த இடத்தில் யாரையும் சேர்க்க முடியாது. நீங்கள் சிராஜை மட்டுமே வைத்துதான் விளையாட முடியம்.

ஜஸ்பிரித் பும்ரா 72 போட்டிகளில் 24.3 சராசரி மற்றும் 4.63 என்ற பொருளாதார விகிதத்தில் 121 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அவர் புத்திசாலி – ஒரு ஆட்டத்திற்கு கிட்டத்தட்ட இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்துகிறார். ஆசியாவில் அவரது சராசரி 23.9 ஆகவும் பொருளாதார விகிதம் 4.65 ஆகவும் இருக்கிறது. இவை தனித்துவமான எண்கள் என்று நான் நினைக்கிறேன்.
முகமது ஷமியின் ஒட்டுமொத்த எண்ணிக்கை நன்றாக உள்ளது – 90 ஆட்டங்களில் 25.9 சராசரியில் 162 விக்கெட்டுகள். பும்ராவின் ஸ்டிரைக் ரேட் மற்றும் சராசரி போன்ற கிட்டத்தட்ட ஒரே மாதிரியான ஸ்ட்ரைக் ரேட். அவரது பொருளாதாரம் சற்று உயர்ந்தது. அவர் பொருளாதார விகிதம் 5.60 என்று இருக்கிறது.

ஆனால் முகமது ஷமி ஆசிய போட்டிகளில் எடுத்துக்கொண்டால் 39 போட்டிகளில் 64 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் சராசரி 30.3 முன்னதாகவும், எக்கனாமிக் ரேட் 5.96 ஆகவும் இருக்கிறது. இவரிடம் இது மட்டும்தாம் சரியில்லையே தவிர இந்தியாவிற்கு வேகப்பந்து வீச்சாளர்கள் தாக்குதல் என்றும் இவர்கள் தான் என்று கூறியுள்ளார் ஆகாஷ் சோப்ரா.



