உலக கோப்பை தொடரானது சமீபத்தில் தொடங்கிய நிலையில் இந்தியா ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடந்த போட்டியில் இந்திய அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து நேற்று நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா மிகவும் சுலபமாகவே வெற்றி பெற்றது. இதனால் இந்திய அணிக்கு சாதகமான ஒரு சூழ்நிலை தற்போது நிலவுகிறது.

இந்நிலையில் நாளை அகமதாபாத்தில் மைதானத்தில் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் அற்புதமான போட்டியாக இந்தியா vs பாகிஸ்தான் போட்டியானது நடக்க இருக்கிறது. கடந்த இரண்டு போட்டிகளில் விளையாடாத வீரரான சுப்மன் கில் இந்த போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பு அதிகம், அதே நேரத்தில் தற்போது உள்ள இந்திய அணியும் மிகவும் வலுவாக இருபதினால் இந்தியா வெற்றியடையாவே அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
அதே வேலையில் மறுபுறம் பாகிஸ்தான் அணியில் சில தடுமாற்றங்கள் இருந்து வருகிறது குறிப்பாக அவர்களின் பந்துவீச்சு என்பது கொஞ்சம் சொதப்புவதாகவே தெரிகிறது. ஏனென்றால் பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சுக்கு எதிராக இலங்கை 344 ரன்களை அடித்தது. அதே நேரம் பாபர் அசாமும் கடந்த இரண்டு போட்டிகளிலுமே தடுமாறுகிறார். இந்த நிலையில் தான் பாகிஸ்தான் அணி குறித்து பேசியுள்ளார் ஆகாஷ் சோப்ரா.

அவர் கூறுகையில் “பாகிஸ்தான் முகாமிலும் அவர்களின் நிபுணர்களின் முகங்களிலும் பார்வைகளிலும் அவ்வளவு நம்பிக்கையை நீங்கள் காணவில்லை. நிறைய இடைவெளிகள் தெரிவதால் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இல்லை என்று எனக்கு தோன்றுகிறது. பந்துவீச்சை பொருந்தவரையில் பாகிஸ்தான் வலிமை என்பது அவர்களின் பலவீனமாக மாறிவிட்டது. ஷஹீன் ஷா அப்ரிடியின் மூன்றாவது விரல் வீங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
அதனால் அவர் பந்தை சரியாகப் பிடிக்க முடியவில்லை. அது அவருக்கு மிகவும் கடினமாக இருக்கிறது. ஹசன் அலி நன்றாக இருக்கிறார் ஆனால் நாங்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்படுவோமா என்று தெரியவில்லை. ஹாரிஸ் ரவூப் நிறம் மாறாமல் பார்த்துக் கொண்டார். ஷதாப் கானால் சரியான இடத்தில் பந்தை பிட்ச் செய்ய முடியவில்லை.

முகமது நவாஸ் மிகவும் தட்டையாக இருக்கிறார். அவர்கள் உசாமா மிராக எங்கு களமிறக்குவர் என்று தெரியவில்லை. மேலும் பாபர் இந்தியாவுக்கு எதிராக அரைசதம் அடித்ததில்லை. இமாம்-உல்-ஹக் எப்போது வேண்டுமானாலும் ஷார்ட் பந்தில் அவுட் ஆகலாம் என்று தோன்றுகிறது. ஆர்டரில் இறங்கிய இப்திகார் அகமது கூட இவ்வளவு ரன்கள் எடுக்கவில்லை என்று கூறியுள்ளார் ஆகாஷ் சோப்ரா.



