மேற்கிந்திய தீவுகளுக்கு இந்திய அணியானது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது, இந்த சுற்றுப்பயணத்தில் ஏற்கனவே 3 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 1-0 என்ற கணக்கில் இந்தியா வென்றா வென்ற ஒருநாள் போட்டிகளானது தொடங்கியது. அதில் முதல் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்தியா வெற்றிபெற்றாலும், 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா மோசமான தோல்வியை தழுவிய நிலையில் 3வது போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது.

இந்நிலையில் இந்த வெற்றிக்கு மிக முக்கியமான ஒரு காரணமாக இருந்தவர் ஷர்துல் தாகூர். இவர் முதல் போட்டியில் பெரிதாக விக்கெட்டுகள் எடுக்கவில்லை என்றாலும் அதற்கு அடித்த 2 வது போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார் இருந்த போதிலும் இந்தியா தோல்வியை தழுவியது. மேலும் கடைசியாக நடந்த 3வது ஒருநாள் போட்டியில் ஷர்துல் தாகூர் 6.3 ஓவர்கள் வீசி 37 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
சொல்லப்போனால் ஷர்துல் தாகூர் கடந்த 2019 உலக கோப்பை போட்டியில் இருந்து ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியாயவர் என்ற பட்டியலில் முன்னிலையில் இருக்கிறார் அப்படி இருந்து இவருக்கு பெரிதாக எந்த அங்கீகாரமும் கிடைத்து இல்லை. இந்நிலையில் தான் இது குறித்து பேசியுள்ள முன்னாள் இந்திய அணியின் வீரரான ஆகாஷ் சோப்ரா பலவிதமான கருத்துகளை கூறியுள்ளார்.

அவர் கூறுகையில் “முந்தைய போட்டியிலேயே ஷர்துல் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் பந்து வீசும் விதத்திற்கு மிகக் குறைவான பாராட்டுக்கள் தான் கிடைக்கிறது. அவர் எப்படி இவ்வளவு விக்கெட்டுகளை எடுத்தார் அதே நேரத்தில் ஏன் இவ்வளவு ரன்களை விடுகிறார் என்ற இரண்டுமே எப்படி கைகோர்த்துச் செல்கின்றன என்பதை நான் கண்டுபிடிக்க முயற்சிக்கிறேன்.
நீங்கள் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினால் எக்கொனமிக் ரேட் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை, ஏனெனில் 300 இலக்காக இருக்கும். அவர் ஓவருக்கு 6 ரன்களுக்கு மேல் கொடுக்கவில்லை. அவர் வீசும் பந்துகளின் எண்ணிக்கை, அவருக்கு விக்கெட் கிடைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக உருவாக்குகிறது

நாம் இதனை அவர் அதிர்ஷ்டத்தால் செய்கிறார் என்று கூறலாம், ஆனால் நீங்கள் ஷர்துலை உன்னிப்பாகக் கவனித்தால், அவருக்கு விக்கெட் எடுக்கும் அதிர்ஷ்டம் இருப்பதற்கான காரணம் அவர் சரியாக பகுதிகளில் பந்துவீசுவதால் என்று தெரியும், அதுபோல அவருக்கு அதில் அதிக நம்பிக்கை உள்ளது. நீங்கள் அவரிடம் எவ்வளவு சிறப்பான பந்துவீச்சாளர் நீங்கள் என்று கேட்டால்? அவர் நான் “டென்னிஸ் லில்லிக்கு சமமானவர் என்று கூறினார். அதுதான் அவருக்கு இருக்கும் நம்பிக்கை. அதனால் தான் எனக்கு அவரின் பந்துவீச்சை பிடித்திருக்கிறது.




