ரோஹித் சர்மா இல்லாத நிலையில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக இருந்தார். முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் ஐந்து மற்றும் ஏழு ரன்கள் மட்டுமே எடுத்த அவர் பின்னர் மூன்றாவது ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடிய அவர் மெதுவாக ஆரம்பித்து 52 பந்துகளில் 70* ரன்கள் எடுத்து எடுத்தார்.

ஆனால் நான்கு இன்னிங்ஸ்களில் 77 ரன்கள் மட்டுமே எடுத்ததால், டி20 போட்டிகளில் ஹர்திக்கின் ஃபார்ம் சரிந்தது. மேலும் ஒட்டு கேப்டனாக ஹர்திக் பாண்டியா பல தவறுகளையும் செய்தார். அதனை அவரே தொடரின் தோல்வியின் முடிவில் கூறினார். இப்படிப்பட்ட நிலையில் தான் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா ஹர்திக் பாண்டியாவுக்கு ஆதரவளித்து பேசியுள்ளார்.
அவர் கூறுகையில் “ஹர்திக் பாண்டியா இந்தியாவிற்கு எவ்வளவு முக்கியம் என்பதை நாம் இங்கு பார்க்க வேண்டும். நம்முடைய நாட்டில் ஒரே ஒரு ஹர்திக் பாண்டியா மட்டுமே இருக்கிறார். அவரால் புதிய பந்தில் வேகமாக பந்து வீசக்கூட முடியும். மேலும் போட்டியின் நடுவிலும் வீசுவார். கிட்டத்தட்ட 140 கிமீ வேகத்தில் ஹர்திக் பாண்டியாவால் பந்துவீச முடியும். பின்னர் பேட்டிங்கும் செய்வார். விக்கெட்டுகள் விழுந்த பிறகு கீழே வரும் பேட்ஸ்மேனாக வந்து ரன்கள் எடுக்கவும் உதவுவர்.

அவர் இந்திய அணிக்கு ஒரு கேம்-சேஞ்சராக இருக்க முடியும் என்று நான் நினைக்கிறேன். அவர் சிறப்பாகச் செயல்படுவது இந்தியா சிறப்பாகச் செயல்படுவதுடன் நேரடியாக தொடர்புடையது. இந்திய அணியானது உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்றால், ஆல்-ரவுண்டர்களின் செயல்திறனில் இந்தியா கவனம் செலுத்தப்படும், அவர்களில் இந்தியாவின் வெற்றிக் கனவில் அவர் மிக முக்கியமான வீரர்களாக இருப்பார்கள் என்றார்.
மேலும் பேசிய அவர் கூறுகையில் நாங்கள் ஹர்திக் பாடியாவை போன்ற ஒருவரைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறோம். ஷர்துல் தாகூர் கிடைத்தால் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் கிடைப்பார். விஜய் சங்கர், ஷிவம் துபேவை போன்றவர்கள் பந்துவீசவில்லை. அதனால் அந்தத் தரத்தில் ஆல்-ரவுண்டர் கிடைப்பது கடினம். வேகப்பந்து வீச்சாளர், ஆல்ரவுண்டர் மற்றும் போட்டியை முடிக்கும் திறமை போன்றவை ஹர்திக் பாண்டியனை போல யாருக்கும் கிடையாது என்றார் அவர்.

இந்நிலையில் வரும் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் ஒருநாள் உலகக் கோப்பையை இந்தியா நடத்த உள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு இலங்கை மற்றும் வங்கதேசத்துடன் இணைந்து நடத்திய உலகக் கோப்பையை இந்தியா வென்றது. 2015 மற்றும் 2019 இல், போட்டியை நடத்தும் நாடுகள் வென்றன, மேலும் வரவிருக்கும் போட்டியில் அந்த போக்கு தொடரும் பட்சத்தில் இந்தியா வெல்லும் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள்




