கிரிக்கெட்டில் எது சுவாரசியமான போட்டி என்றால் அனைவருக்கும் முதலில் நியாபகம் வருவது இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி தான். ஏனெனில் அண்டை நாடுகளான இவ்விரு அணிகளும் கிரிக்கெட்டை விளையாட்டாக பார்க்காமல் அதை கௌரவமாக கருதி ஆக்ரோசத்துடன் முழு திறமையை வெளிப்படுத்தி நேருக்கு நேர் மோதிக் கொள்வார்கள் என்பதாலேயே இந்தியா vs பாகிஸ்தான் போட்டிகள் உலகப்புகழ் பெற்றதாக இருக்கிறது.

இந்நிலையில் உலக கோப்பை 2023 போட்டியானது வரும் ஆக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது. மேலும் இதற்கு முன்னதாகவே இந்தியா vs பாகிஸ்தான் போட்டியானது நடக்க இருக்கிறது.இதனால் உலக கோப்பை போட்டிக்கு முன்னதாகவே இந்தியா vs பாஸ்கிதான் போட்டியானது நடக்க இருப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எந்த போட்டிக்கு அதிகரித்துள்ளது. மறுபுறம் விராட் கோலியா அல்லது பாபர் அசாமா? யார் அதிக ரன்களை விளாசுவர்கள் என்ற கேள்வியும் நிலவி வருகிறது.
இந்த கேள்விக்கு பல இந்திய மற்றும் பாகிஸ்தான் ஜாம்பவான்களும் வீரர்களும் கருத்து தெரிவித்த நிலையில் தான் முன்னாள் தென்னாபிரிக்க அணியின் வீரரான ஏபி டிவில்லியர்ஸ் இந்த கேள்வி குறித்து யூடியூப் பக்கத்தில் பதிலளித்துள்ளார். அவர் கூறுகையில் “ஆசியா கோப்பையில் எனக்கு பிடித்தவர்கள் நிச்சயமாக விராட் மற்றும் பாபர் தான். வேறு யாரும் நம்பமுடியாத ஃபார்மில் உள்ள வீரர்களை நான் பார்த்ததில்லை. அங்குதான் விராட்டும் பாபரும் வித்தியாசமாக இருக்கின்றனர்.

அவர்கள் ரன்களை அடிக்கும்போது, 130-150 ரன்கள் அடிக்கிறார்கள். அங்கே அவர்கள் உண்மையில் செட் ஆகிவிட்டனர். வேறு யாராவதை அங்கு பார்த்தாள் கண்டிப்பாக ஆச்சரியப்படுவேன்.ஒருநாள் கிரிக்கெட் போட்டியை பொறுத்தவரையில் யார் அதிக ரன்களை விளாசுவார்கள் என்றால் அது கொண்ட கடினமான பதில் தான் என்று நினைக்கிறேன். எனக்கு உண்மையில் உறுதியாக தெரியவில்லை. அதை செய்யக்கூடிய நிறைய வீரர்கள் உள்ளனர்.
பாபர், கேன் வில்லியம்சன் போன்ற ஃபார்மில் இருக்கும் வீரர்களை பார்க்கிறோம். வெளிப்படையாக, விராட் வரிசையில் எங்காவது இருப்பார். விராட் 50 ஓவர் கிரிக்கெட்டை முற்றிலும் நேசிக்கிறார். அவரது பெயர் நிச்சயமாக இருக்கும் என்று கூறினார் ஏபி டிவில்லியர்ஸ்.

மேலும் பேசிய அவர் கூறுகையில் “கடந்த காலத்தில் ஷாஹீன் அப்ரிடியிடம் இருந்து பார்த்த அதே ரிதம் இல்லை. அவர் கொஞ்சம் வெளிப்படுத்துகிறாரா? அல்லது சிறிய காயம் இருக்கிறதா? என்று எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை அவர் தனது ஆற்றலைச் சேமித்துக்கொண்டிருக்கலாம். மிகப் பெரிய விளையாட்டுகள் வரவுள்ளன என்பதை அறிந்து அவர் கொஞ்சம் ரிதத்தை கண்டுபிடிக்க முயற்சிக்கலாம். அவர் பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய வீரர் என்று டிவில்லியர்ஸ் மேலும் கூறினார்.




