சமீப காலங்களில் மனஅழுத்தம் மற்றும் குழப்பமடைதல் என்பது விளையாட்டில் அதிகம் ஏற்படுகிறது. அதை தவிர்க்க பலரும் பல வகைகளில் முயற்சி செய்கின்றனர். ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் கூட இந்த பிரச்னையால் தான் எவ்வளவு அவதிப்பட்டேன் என்று கூறியிருந்தார். அப்படிப்பட்ட நிலையில் தென் ஆபிரிக்க ஜாம்பவான் ஏ.பி.டிவில்லியர்ஸ் தனக்கு நடந்த சம்பவம் குறித்து வெளிபடையாக பேசியுள்ளார்.

ஏ.பி.டிவில்லியர்ஸ் பேசியது :
அவர் கூறியதாவது “என்னை இதனுடன் தொடர்புபடுத்த முடியும், ஏனென்றால் பெரிய விளையாட்டுகளுக்கு முன்பு எனக்கு இதே போன்ற பிரச்சினைகள் இருந்தன. உண்மையில் நான் தூங்க சிரமப்பட்டன. அப்போது ஸ்லீப்பிங் மாத்திரைகள் எனக்கு தூங்க உதவியது. ஆனால் இது போக போக ஒரு பிரச்சினையாக மாறும். ஏனென்றால் இந்த மாத்திரை உங்களை தூங்க வைக்காது. மாறாக இது உங்களை மிகவும் நிதானமாக உணர வைத்து, நல்ல உணர்வை கொடுக்கும் அவ்ளவுதான்.
ஊசி போட்டுக்கொண்டேன் :
2015 உலகக் கோப்பையில் விளையாட்டை நான் மிகவும் தெளிவாக நினைவில் வைத்திருக்கிறேன். அந்த போட்டியில் நான் 100 ரன்களை விளாசினேன். அது என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் சிறந்த போட்டி என்றே சொல்லலாம். ஆனால் என்னால் அந்த இரவு தூங்க முடியவில்லை. இந்த இரவு 2 முதல் 3 மணிநேரம் தான் தூங்கினேன். ஒரு 3மணியளவில் என்னால் தூங்காகவே முடியவில்லை. நான் மருத்துவரை என்னுடைய அறைக்கு அழைத்து ஊசி போட்டுக்கொண்டேன்.

மனச்சுமை :
எனக்கு வயிற்று பிடிப்புகள் இருந்தன. அது கவலை மற்றும் மனஅழுத்தத்தை அடிப்படையாகக் கொண்டது. ஏனெற்றால் அடுத்து எங்களுக்கு மிகவும் முக்கியமான வெற்றி பெற்றே ஆகவேண்டிய விளையாட்டைப் பற்றி யோசித்துப் பார்த்தேன். பெரிய விளையாட்டு போட்டிகளுக்கு முன்னதாக நான் அறையில் தனிமையில் போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டும் என்று நினைத்து நினைத்து என்னுடைய மனச்சுமையை நானே அதிகப்படுத்தி கொண்டேன்.

இதனால் எனக்கு தூக்கமே வரவில்லை. இதனால் நான் அவ்வப்போது தூக்க மாத்திரைகளையும் பயன்படுத்தினேன். குறிப்பாக பெரிய விளையாட்டுகளுக்கு முன்பு. ஸ்லீப்பிங் மாத்திரைகள் உங்களை அடிமையாக மாற்றிவிடும். சில நேரங்களில் தேவையில்லா போது அவற்றை எடுக்கத் தொடங்குகிறீர்கள். அங்குதான் அது பிரச்சினையாக மாறும். அதிர்ஷ்டவசமாக நான் கடந்த 5-7 ஆண்டுகளில் அதில் இருந்து வெளியில் வந்துவிட்டேன். அது நன்றாக இருந்தாலும் மிகவும் ஆபத்தான ஓன்று.
வெளியேறும் வழி :
இது போன்ற விஷயங்கள் உங்களுக்கு நிகழும்போது, அதைப் பற்றி மற்றவர்களிடம் செல்ல வேண்டும். என் தொழில் வாழ்க்கையில் நான் தவறாகப் புரிந்து கொண்டேன். ஏனென்றால் பயிற்சியாளர் அல்லது கேப்டனுக்கு என்னுடைய பலவீனத்தைக் காட்ட விரும்பவில்லை. இதில் இருந்து வெளியில் வர னால ஊட்டச்சத்து மிகுந்த உணவிகளையும், நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும், நன்றாக சாப்பிட வேண்டும் மற்றும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஒரு நல்ல இரவு ஓய்வு அடுத்த நாள் உங்களுக்கு வெற்றிக்கு அழைத்து செல்லும் என்றார் ஏ.பி.டிவிவில்லியர்ஸ்.




