ஐபிஎல் முடிந்த நிலையில் வெளிநாட்டு வீரர்கள் பலரும் மீண்டும் தங்களுடைய நாட்டிற்க்காக விளையாட திரும்பியுள்ளார். குறிப்பாக ஆஷஸ் தொடர், இந்தியா vs வேஸ்ட் இண்டீஸ், உலக கோப்பை குவாலிபயர் என பல சுவாரசியமான போட்டிகள் நடந்து வருகிறது. இதனிடையே உலகின் சிறந்த அணிகளில் ஒன்றான ஆப்கானிஸ்தான் பங்களாதேஷ்ற்கு சுற்றுப்பயணம் சென்றிருக்கிறது. அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது.

இந்த தொடரானது வரும் ஆக்டோபர் மாதம் தொடங்கும் உலக கோப்பை போட்டிக்கு பயிற்சி போட்டியாக பார்க்கப்படுகிறது. இந்த தொடரில் வெளியில் இருந்து வந்த அணியான ஆப்கானிஸ்தான் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தி வந்தது. முதல் போட்டியின் அற்புதமான வென்றியை தொடர்ந்து அடுத்ததாக 2வது போட்டியானது கடந்த 8ஆம் தேதி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணியானது பந்துவீச முடிவு செய்தது.
ஏற்கனவே ஒரு போட்டியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு இந்த தொடரை வெல்ல ஒரே ஒரு வெற்றி மட்டுமே தேவை பட்டது. இந்நிலையில் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் பங்களாதேஷ் பந்துவீச்சாளர்களின் பந்துகளை பறக்க விட்டனர். தொடக்க வீரர்களான “ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் பிராஹிம் சத்ரன் நிலையாக நின்று 5வது ஓவரின் போது 100 ரன்களை கடந்தனர்.

சரி இதற்கு பிறகாவது விக்கெட் விழும் என்று எதிர்பார்த்த பங்களாதேஷ் அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது ஏனென்றால் ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் பிராஹிம் சத்ரன் 37 ஓவர்கள் கடந்த நிலையில் 256 ரன்கள் என்ற சாதனை பார்ட்னர்ஷிப்பை படைத்தனர். இதில் குர்பாஸ் 125 பந்துக்ளைல் 145 ரன்களை விளாசினார். பின்னர் ஒருவழியாக குர்பாஸ் IBW வில் ஆட்டமிழந்தார். இருந்த போதிலும் ஆப்கானிஸ்தான் வெளிநாட்டில் எடுத்த அதிகபட்ச பார்ட்னர்ஷிப் என்ற சாதனையை படைத்து சென்றார்.

பின்னர் வந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிதாக எதுவும் செய்யாத நிலையில் பிராஹிம் சத்ரன் 118 பந்துககளில் சதம் அடித்தார். ஆனால் அதற்கு அடித்த பந்தே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் ரன்களும் விக்கெட்டுகளை மாறிமாறி விழுக இறுதியில் ஆப்கானிஸ்தான் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 331 ரன்களை விளாசியது. இதனை தொடர்ந்து இந்த இமாலய இலக்கை எதிர்கொள்ள களமிறங்கிய பங்க்களதேஷ் அணிக்கு தொடக்கமே சொதப்பலாக அமைந்தது.
A fourth ODI ton for Ibrahim Zadran in his 13th match 👏#BANvAFG | https://t.co/mvFeGdwCsz pic.twitter.com/GE7B1mcwHJ
— ICC (@ICC) July 8, 2023
முதல் 6 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் விழுக பங்களாதேஷ் அணி தடுமாறியது. ஆனால் முஷ்பிகுர் ரஹீம் மட்டும் பொறுமையாக நின்று 85 பந்துகளில் 69 ரன்களை விளாசினார். இறுதியில் 43.2 ஓவர்களால் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பங்களாதேஷ் அணியானது 189 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதன் 142 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆப்கானிஸ்தான் அணியானது தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது.
Superb bowling by Afghanistan. Bangladesh have lost half their side!#BANvAFG | https://t.co/mvFeGdwCsz pic.twitter.com/XqWUbB6gIn
— ICC (@ICC) July 8, 2023
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் கடந்த 2022 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் ரோஹித் மற்றும் தோனி தலைமையினால இந்திய அணி பங்களாதேஷ் அணியிடம் அவர்களது மன்னின் தோல்வியை தழுவியது. மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் மிகப்பெரிய அணிகளான வெஸ்ட் இன்டீஸ் , தென்னாபிரிக்க போன்ற அணிகளை தங்களுடைய சொந்த மண்ணில் வீழ்த்திய பங்களாதேஷ் அணியை ஆப்கானிஸ்தான் வீழ்த்தியிருப்பது தற்போது பாராட்டுகளை பெற்று வருகிறது.




