அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை போட்டியானது வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக தற்போது ஆசிய கோப்பை போட்டியானது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மூலம் உலக கோப்பை போட்டியில் விளையாடும் ஆசிய அணிக்கு நல்ல ஒரு பயிற்ச்சியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஆசிய கோப்பை தொடரில் இந்த நிலையில் நேற்று இந்தியா vs பாகிஸ்தான் போட்டியானது தற்போது நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் மழை வரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு பேட்டிங் செய்வதாக அறிவித்த நிலையில் தடுமாறிய இந்திய அணி 48.5 ஓவரில் 266 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதை தொடர்ந்து 267 ரன்களை துரத்திய பாகிஸ்தானை சேசிங் செய்யவிடாமல் மழை வந்து மொத்தமாக தடுத்ததால் போட்டி ரத்து செய்யப்பட்டது. அதன் காரணமாக இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் பகிர்ந்து கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்தப்போட்டியில் முக்கியமான தருணம் என்று கூறினால் முன்னதாக ஷாஹீன் அப்ரிடி, ஹரிஷ் ரவூப் ஆகியோருக்கு எதிராக ரோகித் சர்மா போன்றவர்கள் தடுமாறினாலும் விராட் கோலி காப்பாற்றுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் ரோஹித் அவுட்டானதும் களமிறங்கிய விராட் கோலி இன்சைட் எட்ஜ் வாங்கி க்ளீன் போல்ட்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தார்.

இந்நிலையில் அதற்கு பிறகு பொறுமையாக விளையாடிய இஷான் கிஷான் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் இணைந்து பலமான பாட்னர்ஷிப் அமைத்து ரன்களை விளாசி 266 என்ற ஒரு தாக்குப்பிடிக்க கூடிய ஸ்கோருக்கு கொண்டுவந்தனர். ஆனால் அதற்கு பிறகு மழை காரணமாக இரண்டவது இன்னிங்ஸ் நடக்காமல் போனது. இப்படிபட்ட நிலையில் தான் இந்த போட்டியில் விராட் மற்றும் ரோஹித் என முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய ஷாகின் ஷா அப்ரிடி தனக்கு அவர்களில் எவருடைய விக்கெட் எடுக்க பிடித்திருந்தது என்பது குறித்து பேசியிருந்தார்.

அவர் கூறுகையில் “புதிய பந்தின் வேகமாக விக்கெட் எடுப்பதுதான் எங்களுடைய திட்டமாக இருந்தது. இந்திய அணியின் கோலி மற்றும் ரோஹித் இருவருமே மிகவும் முக்கியமான விக்கெட்டுகள் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு பேட்ஸ்மீன்களும் எனக்கு ஒன்றுதான். ஆனால் ரோஹித்தின் விக்கெட் எனக்கு மிகவும் பிடித்திருந்தது என்று நினைக்கிறேன் என்றார் ஷாகின் ஷா அப்ரிடி.
மேலும் பேசிய அவர் கூறுகையில் எண்களின் வேகப்பந்து வீச்சாளர்களின் திட்டங்கள் பலனளித்தன. நசீம் மணிக்கு 150 கிமீ வேகத்தில் பந்துவீசுகிறார், அது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறதுஎ. அவர் மைத்தனத்தில் மிகவும் வேகமாக இருக்கிறார். புதிய பந்து ஸ்விங் மற்றும் சீம் ஆகியது ஆனால் அதற்குப் பிறகு எதுவும் இல்லை என்று கூறியுள்ளார் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஷாகின் ஷா அப்ரிடி.




