அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை போட்டியானது வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக தற்போது ஆசிய கோப்பை போட்டியானது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மூலம் உலக கோப்பை போட்டியில் விளையாடும் ஆசிய அணிக்கு நல்ல ஒரு பயிற்ச்சியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த தொடரில் முதலில் இதே ஆதிக்கம் செழித்தி வந்தது இந்திய அணி.

அதன் காரணமாக இந்தியா முதல் ஆளாக ஆசிய கோப்பை 2023 தொடரின் இறுதி போட்டிக்கு சென்றது. இதனையடுத்து பாகிஸ்தான் அணியை வீழ்த்திய இலங்கை அணியானது இந்தியாவுடன் மோதிய நிலையில் அசால்டாக இலங்கை அணியை வீழ்த்தி 8வது முறையாக ஆசிய கோப்பையை வென்றது இந்தியா. இந்நிலையில் ஆசிய கோப்பையில் விளையாடிய வீரர்கள் 95 சதவிகிதம் உலக கோப்பையிலும் விளையாடுவார்கள் என்று கூறப்படுகிறது.
அதே சமயம் நேற்று நடந்த போட்டியில் ஆக்சர் படேலுக்கு பதிலாக வாஷிங்க்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட்டார். இதே போன்று உலக கோப்பை தொடரிலும் சில வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஒருவேளை அப்படி வழக்கப்பட்டால் இந்திய மண்ணில் அசைக்க முடியாத பந்துவீச்சாளராக இருக்கும் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்று சந்தேகம் பலரின் கேள்வியாக இருந்து வரும் நிலையில் தான் முன்னாள் ரோஹித் சர்மா சூசகமாக பதில் ஒன்றி கொடுத்துள்ளார்.

அவர் கொடுத்த பேட்டியில் “சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டர்களை பொறுத்த வரை அனைவரும் வரிசையில் நிற்கிறார்கள். உண்மையை சொல்ல வேண்டுமெனில் நான் இதைப் பற்றி அஸ்வினிடம் தொலைபேசியில் நேரடியாக பேசியுள்ளேன். எனவே அவரும் இந்திய அணியில் தேர்வு செய்வதற்கான வரிசையில் இருக்கிறார். அதே போலவே வாஷிங்டன் சுந்தரும் இருக்கிறார். குறிப்பாக நாங்கள் பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய இரண்டிலும் அசத்தும் வேலை செய்பவர்களை விரும்புகிறோம்
மேலும் அக்சர் படேல் திடீரென காயத்தை சந்தித்ததால் நாங்கள் வாஷிங்டன் சுந்தரை கொண்டு வந்தோம். பெங்களூருவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக பயிற்சியில் இருந்த அவர் ஃபிட்டாக இருப்பதால் நாங்கள் உடனடியாக அழைத்தோம் என்று கூறியுள்ளார் கேப்டன் ரோஹித் சர்மா.

இந்நிலையில் இதற்கு முன்னார் சமீபத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் கூட தன்னை இந்தியாவிற்க்காக்க விளையாடுவதற்கு நாளை அழைத்தால் கூட அணியில் விளையாட 100 சதவிகிதம் தயாராக இருப்பதாக சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார். ஒருவேளை அஸ்வின் உலக கோப்பை தொடரில் இடம்பெறும் பட்சத்தில் இந்திய மண்ணில் மற்ற நாடுகளின் பேட்ஸ்மேன்களை திணறடிப்பார் என்பதில் சந்தேகம் கிடையாது.



