ஆசிய கிரிக்கெட்டின் பரம எதிரிகளாக திகழும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கடந்த 10 வருடங்களாக எல்லை பிரச்சினை காரணமாக இருதரப்பு தொடர்களில் மோதுவதை தவிர்த்து விட்டு ஆசிய மற்றும் ஐசிசி உலகக் கோப்பைகளில் மட்டுமே விளையாடி வருகின்றன. ஆனால் அந்த வரிசையில் வரும் செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடைபெறும் 2023 ஆசிய கோப்பையில் பாதுகாப்பு காரணங்களால் பங்கேற்க முடியாது என்று அறிவித்த பிசிசிஐ.

அந்த இடத்தை தவிர்ந்து பொதுவான இடத்தில் நடத்துவதற்கு தேவையான அழுத்தம் கொடுப்போம் என்று தெரிவித்தார். அதற்கு பதிலடியாக எங்கள் நாட்டுக்கு வராமல் போனால் வரும் அக்டோபர் மாதம் உங்கள் நாட்டில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பையை நாங்களும் புறக்கணிப்போம் என்று பாகிஸ்தான் அறிவித்தது. அப்போதிலிருந்து கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பிரச்சனை வந்த நிலையில் வேறு வழியின்றி அந்த அணி பங்கேற்கும் போட்டிகளை அந்நாட்டில் நடத்துவதற்கு ஆசிய கவுன்சில் அனுமதி கொடுத்துள்ளது.
அதே போல இந்தியா பங்கேற்கும் போட்டிகள் மற்றும் பைனல் உட்பட எஞ்சிய போட்டிகளை இலங்கையில் நடத்துவதற்கு ஆசிய கவுன்சில் திட்டமிட்டுள்ளது. அப்படிபட்ட நிலையில் தான் இந்த போட்டிகளுக்கான அட்டவனை வெளியாகியுள்ளது. மேலும் இந்த வருடம் 50 ஓவர் உலக கோப்பை போட்டி நடப்பதினால் இந்த வருட ஆசிய கோப்பையானது 50 ஓவர்கள் என்று நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டி அட்டவணை விபரம் :
ஆசிய கோப்பையின் முதல் போட்டியானது வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி பாகிஸ்தானுக்கும் நேபாள் அணிக்கு எதிராக நடைபெறுகிறது. இரண்டாவது போட்டியானது அடுத்த நாள் 31 ஆம் தேதி இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் எதிராக நடைபெறுகிறது. இந்நிலையில் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த இந்தியா vs பாகிஸ்தான் போட்டியானது வரும் செப்டம்பர் 2ஆம் தேதி இலங்கையில் நடைபெறுகிறது.
I am happy to announce the schedule for the highly anticipated Men's ODI #AsiaCup2023, a symbol of unity and togetherness binding diverse nations together! Let's join hands in the celebration of cricketing excellence and cherish the bonds that connect us all. @ACCMedia1 pic.twitter.com/9uPgx6intP
— Jay Shah (@JayShah) July 19, 2023
அதனையடுத்து 3ஆம் தேதி ஆபிகானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணியும், 4ஆம் தேதி இந்தியா vs நேபால் அணியும், 5ஆம் தேதி ஆபிகானிஸ்தான் vs இலங்கை அணிகளும் மோதிக்கொள்கின்றனர். இந்த போட்டிகளானது ரவுண்ட் ராபின் முறைப்படி விளையாடுவதினால் முதல் சுற்றில் வரும் 4 அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெரும். அங்கு டாப் இரண்டு அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெரும் என்பது குறிப்பிடதக்கது.
மேலும் இந்திய vs பாஸ்கிதான் போட்டிகளை பொறுத்தவரையில் மூன்று முறை மோத வாய்ப்பிருக்கிறது. அதாவது முதல் சுற்றில் ஒருமுறையும், சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றால் அங்கும், மேலும் இந்த சுற்றில் முதல் இரண்டு இடங்களுக்கு இந்தியாவும் பாகிஸ்தானும் வந்தால் இறுதி போட்டியில் இந்தியா vs பஸ்கிஸ்தான் போட்டியானது நடைபெறும். இது நடந்தால் உலககோப்பைக்கு முன்னதாக அற்புதான போட்டியாக இது இருக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது.




