உலக கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத ஒரு அணி என்றால் இந்திய அணியை கூறலாம். சொல்லப்போனால் இந்தியா தற்போது மூன்று வகையான கிரிக்கெட்டிலும் முதன்மையான அணியாக திகழ்ந்து வருகிறது. அதோடு சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை போட்டியிலும் இந்தியா கோப்பையை வென்றது. அப்படி முக்கியமான காரணமாக திகள்பவர்கள் இந்திய அணியின் வீரர்களே. அவர்களே முதன்மையான அணியாக உலக அரங்கில் நிலைத்து நிற்க காரணமானவர்கள்.

அப்படி இந்தியா முக்கிய தூண்களாக இருந்து வருபவர்கள் விராட் கோலி, மற்றும் ரோஹித் சர்மா. இவர்கள் இருவரும் நவீன கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு முக்கிய பங்கற்றி வருகின்றனர். சொல்லப்போனால் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் 48 சதங்களை விளாசியுளார். அதே போல ரோஹித் சர்மா ஒரு கேப்டனாக தற்போது இந்திய அணியை நடந்துவரும் உலக கோப்பை தொடரில் சிறந்த அணியாக நிற்கவைத்து கொண்டிருக்கிறார்.
தற்போது நடந்துவரும் உலக கோப்பை தொடரில் இந்தியா மிகவும் பலம் வாய்ந்த அணியாக இருக்கிறது. 5 போட்டிகளில் வெற்றிபெற்ற இந்தியா இன்று இங்கிலாந்து அணியுடன் மோதி வருகிறது. அதே சமயம் பாகிஸ்தான் அணியானது கொஞ்சம் தடுமாறி வருகிறது. ஏற்கனவே பல போட்டிகளில் தோல்வியை தழுவிய பாகிஸ்தான் தற்போது அரையிறுதி போட்டிக்கு செல்வது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் தான் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் இந்திய அணியின் வீரர்கள் குறித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில் “விராட் கோலி, ரோஹித் ஷர்மா மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோர் உலகில் எனக்கு பிடித்த பேட்டர்கள். அவர்கள் உலகின் தலைசிறந்த வீரர்கள். அவர்கள் நிலைமைகளை நன்றாக படிக்கிறார்கள், அதனால் தான் அவர்கள் சிறந்தவர்கள். நான் அவர்களை பாராட்டுகிறேன் என்றார் பாபர்.
மேலும் பேசிய அவர் கூறுகையில் “.விராட், ரோஹித் மற்றும் கேன் ஆகியோரிடம் நான் விரும்பும் சிறந்த விஷயம் என்னவென்றால், அவர்கள் எப்படி கடினமான சூழ்நிலைகளில் இருந்து அணியை மீட்டெடுக்கிறார்கள் மற்றும் கடினமான பந்துவீச்சுக்கு எதிராக ரன்களை எப்படி எடுக்கிறார்கள் என்பதுதான். இதைத்தான் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன் என்று மேலும் கூறினார் பாபர் அசாம்.



