உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் எதிர் பார்த்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பதில் இன்று 32 வது போட்டியை புனேவில் தென்னாப்பிரிக்கா அணியும் நியூசிலாந்து அணிகளும் மோதின. தென் ஆப்பிரிக்கா அணி புள்ளி பட்டியல் இரண்டாவது இடத்திலும் நியூசிலாந்து அணி புள்ளி பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருந்து வந்தது. தென் ஆப்பிரிக்கா அணிவதற்கு முன்னதாக கடந்த மூன்று போட்டிகளிலும் பெரிய அணிகளான இங்கிலாந்து பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளை எளிதாக வென்றுள்ளது.

ஆனால் நியூசிலாந்து அணியும் கடந்த மூன்று போட்டிகளில் இரண்டு போட்டியில் தோல்வியை தழுவி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றியை கண்டுள்ளது. அந்த இரண்டு அணிகளும் ஒன்று பலம் வாய்ந்த இந்திய அணி மற்றொன்று ஆஸ்திரேலியா அணியும் ஆகும். இந்தப் புள்ளி பட்டியல் அரை இறுதி போட்டிக்கு செல்ல அனைத்து அணிகளும் போராடிக் கொண்டு வரும் நிலையில் இன்றைய போட்டியில் எளிதாக தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பில்டிங் தேர்வு செய்தது. ஆனால் அதன் பின் தான் தெரிந்தது அவர்களிடத்தில் முடிவு தவறானது என்று.

தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பவுமா மற்றும் டிகாக் அருமையான தொடக்கத்தை தந்தனர். தென் ஆப்பிரிக்கா அநியாயம் 50 ஓவர்கள் முடிவில் நான்கு கெட்ட கலை மட்டுமே எழுந்து 357 ரங்களை குறித்து இருந்தது. இதில் தென் ஆப்பிரிக்கா அணியின் சார்பில் அதிகபட்சமாக ரஸ்ஸி வான் டெர் டுசென் 133 கரன்களும் டிகாக் 114 ரன்கள் டேவிட் மில்லர் 53 ரன்களையும் குவித்திருந்தனர். இதன் காரணமாகவே அந்த அணி ஐம்பது ஓவர்கள் முடிவில் மாபெரும் இலக்கான 358 ரன்களை இலக்காக வைத்தது. நியூசிலாந்தின் சார்பில் சவூதீ இரண்டு விக்கெட்டுகளும் போல்ட் மற்றும் நீஷம் தலா ஒரு விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தி இருந்தனர்.
358 ரன்களை இலக்காக் கொண்ட களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு ஆரம்பமே சோதனையாக மாறியது. நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் கான்வே இரண்டு ரன்களில் வெளியேறி அணிக்கு ஏமாற்றத்தை அளித்தார். நியூசிலாந்த அணி 35.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழுந்து 167 ரன்களை மட்டுமே அடித்திருந்தது மாபெரும் தோல்வியை தழுவியது.

நியூசிலாந்தின் அதிகபட்சமாக பிலிப்ஸ் 60 ரன்களும் யங் 34 ரன்களும் மிச்சல் 24 ரன்களை மட்டுமே அடித்திருந்தனர். தென் ஆப்பிரிக்காவின் சார்பில் கேசவ் மஹாராஜ் நான்கு விக்கெட்டுகளையும் மார்கோ ஜான்சன் 3 விக்கெட்டுகளையும் ராபாடா மற்றும் கோட்சி தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர். எனவே தென் ஆப்பிரிக்கா 190 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளனர்.




