நடந்து முடிந்த உலககோப்பை டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியில் இந்திய மற்றும் ஆஸ்திரேலியா மோதின. இதில் இந்திய அணி மிகவும் மோசமான ஒரு தோல்வியை பதிவு செய்தது. ரஹானேவை தவிர யாரும் பெரிதாக விளையாடவில்லை. மேலும் விராட் கோலி, புஜாரா, ரோஹித் சர்மா போன்ற பெரிய வீரர்களும் ரன்கள் எதுவும் எடுக்காமல் ஏமாற்றம் அளித்தனர். இதனால் ரசிகர்கள் மற்றுமின்று முன்னாள் வீர்ர்களை இந்திய அணியையும், இந்திய வீரர்களையும் கடுமையாக விமர்சித்தனர்.

இவைகளோடு மட்டுமல்லாமல் கடந்த 2013ஆம் ஆண்டிக்கு பிறகு இந்திய அணி எந்த கோப்பையையும் வெல்லாத நிலையில் ரசிகர்கள் பலரும் இந்திய வீரர்களை “சோக்கர்க்ள்” என்று விமர்சித்தனர். மேலும் 1983 ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்ற கிரிக்கெட் வீரரும் கூட இந்தியா சிறப்பாக விளையாடுகிறது, ஆனால் முக்கியமான நேரத்தில் சொதப்பி விட்டுவிடுகிறார்கள் என்று கூறியிருந்தார். இப்படிப்பட்ட இந்நிலையில் தான் இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி இந்த மாதிரியான விமர்சங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.
அவர் கூறுகையில் “நான் அவர்களை அப்படி சொல்ல மாட்டேன், ஏனென்றால் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மட்டும் தான் மூன்று வகையான உலகக்கோப்பைகளையும் வென்றிருக்கின்றனர். அதோடு உலகக் கோப்பைகளில் நாம் சுருட்டப்பட்டோம் என்று கிடையாது. இந்திய அணி அரையிறுதி சென்றது இறுகி போட்டிக்கும் பல முறை சென்றிருக்கிறது. ஆனால் அங்கு எங்களினால் வெற்றி பெற முடியவில்லை.

ஏனெற்றால் ஒரு பெரிய கோப்பையை நீங்கள் வெல்ல வேண்டும் என்றால், அணையில் உள்ள அனைவரின் ஒருங்கிணைந்த முயற்சி தேவை. எனவே கோப்பையை வெல்ல முடியவில்லை என்று ஒரு கேப்டனையும் தனி நபரையும் மட்டுமே குறை கூற முடியாது என்றார் முன்னாள் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.
மேலும் உலக கோப்பை டெஸ்ட் சாம்பியன் ஷிப் பற்றி பேசிய ரவி சாஸ்திரி “உலக கோப்பை சாம்பியன் ஷிப் இறுதி போட்டியின் போது நீங்கள் சதம் அடிக்க வேண்டும், அப்படி செய்தால் பந்துவீச்சாளர்கள் மீது உள்ள அழுத்தம் குறைந்து வெற்றியடைய முடியும். அப்படி நீங்கள் 100 அல்லது குறைந்த பட்சம் 50 ரன்களாவது டெஸ்ட், T20, ஒருநாள் போன்ற எந்த வகையான போட்டிகளிலும் எடுக்காமல் இருந்தால், வெற்றிக்கு நீங்கள் தகுதியானவர்கள் கிடையாது என்றார் ரவி சாஸ்திரி.
இந்நிலையில் இந்திய அணியில் ஏற்கனவே கே.எல்.ராகுல் , பும்ரா, ஷ்ரேயஸ் ஐயர் போன்ற வீரர்கள் காயம் காரணமாக கடந்த உலகக்கோப்பை டெஸ்ட் போட்டியில் விளையாடாத நிலையில் அவர்கள் வரும் உலாக்கோப்பைக்கு முன்னதாக அணியில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இணையும் பட்ச்சத்தில் இந்திய அணியின் பலம் இன்னமும் அதிகரிக்கும்.




