அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை போட்டியானது வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்னதாக இந்திய அணியானது இலங்கையில் வரும் செப்டம்பர் 2ஆம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறும் 2023 ஆசிய கோப்பை போட்டியில் விளையாட இருக்கிறது. மேலும் இந்த போட்டியின் மூலம் வெற்றி பெற்றாலும் பெறாவிட்டாலும் ஆசிய அணிகளுக்கு உலக கோப்பை முன்பாக நல்ல பயிற்சி ஆட்டம் போல இருக்கும்.

அதே சமயம் தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெறும் 2023 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடக்கும் இந்த தொடரில் காயத்தை சந்தித்திருந்த ஜஸ்பிரித் பும்ரா, கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் மீண்டும் அணிக்கு எதிரும்பியுள்ளதால எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் நவீன கிரிக்கெட்டில் ஜாம்பவானாக வளம் வரும் விராட் கோலி 2019க்குப்பின் சதமடிக்காமல் இருந்து வந்த கதைக்கு கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற 2022 ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சதமடித்து முற்றுப்புள்ளி வைத்தார்.
அதே வேகத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆரம்பத்திலேயே தோல்வியின் பிடியில் சிக்கிய இந்தியாவை வரலாற்றின் மகத்தான இன்னிங்ஸ் விளையாடி மறக்க முடியாத வெற்றியை பெற்றுக் கொடுத்த அவர் ஐபிஎல் தொடரிலும் 500க்கும் மேற்பட்ட ரன்களை விளாசி தற்போது நல்ல ஃபார்மில் இருக்கிறார். அதனால் இந்த ஆசிய மற்றும் உலக கோப்பையில் அவர் அபாரமாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த நிலையில் விராட் கோலி தற்போது ரன்களை அடிக்க தடுமாறுகிறார் என்றும் ஆசிய கோப்பையில் பாபர் அசாமை விட பெரிய அளவில் ரன்களை அடிப்பார் என்று தமக்கு தோன்றவில்லை என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டாம் மூடி நேற்று தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது பழைய விராட் கோலி திரும்பியுள்ளதால் குறைத்து மதிப்பிட வேண்டாம் என அவருக்கு முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் வீரர் கர்ட்லி ஆம்ப்ரோஸ் பதிலளிக்கும் வகையில் பேசியுள்ளார்.

இந்த விஷயம் குறித்து சமீபத்திய யூடியூப் நிகழ்ச்சியில் ஆவர் கூறுகையில் “விராட் கோலி இப்போதும் நல்ல கிரிக்கெட்டர் தரமான பேட்ஸ்மேன். உலகில் அனைத்து தரமான பேட்ஸ்மேன்களும் தங்களுடைய கேரியரில் ஏதோ ஒரு சமயத்தில் ரன்கள் அடிக்க தடுமாறியுள்ளார்கள். சொல்லப்போனால் சர்வதேச அளவில் விளையாடிய எந்த தரமான பேட்ஸ்மேனும் தடுமாறியதில்லை என்று எனக்கு தெரியவில்லை.
அந்த வகையில் ஸ்பெஷல் பிளேயரான விராட் கோலி தடுமாறிய காலங்களை கடந்து தற்போது ஃபார்முக்கு வந்து விட்ட என்பது போல தெரிகிறது. மேலும் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் அரை சதமடித்த அவர் பின்னர் சதமடித்தார். எனவே தற்போது அவர் விளையாடுவதை பார்க்கும் போது பழைய விராட் கோலி வந்துள்ளது தெரிகிறது. அதனால் இன்னும் அவரால் இந்திய கிரிக்கெட்டுக்கு சில வருடங்கள் பங்காற்ற முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான்.



