இந்தியா சந்தித்த மிகச்சிறந்த வீரர்களில் இருவர் விராட் மற்றும் சச்சின் டெண்டுலகர். இதில் சச்சின் டெண்டுல்கர் இன்னமும் யாராலும் முறியடிக்க முடியாத சில அற்புதமான சாதனைகளை படைத்திருக்கிறார். அதே நேராத்தில் விராட் கோலி மெதுவாக சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை முறியடித்து வருகிறார். சமீபத்தில் நடந்த IND vs WI டெஸ்ட் போட்டியில் தான் விராட் கோலி தன்னுடைய 500வது சர்வதேச போட்டியையும் தன்னுடைய 76 சதத்தையும் விளாசினார்.

மேலும் சர்வதேச ஒருநாள் போட்டியில் விராட் கோலி இன்னமும் 102 ரன்களை விளாசினால் சர்வதேச ஒருநாள் போட்டியில் 13,000 ரன்களை குறைவான போட்டிகளில் பெற்ற வீரர் என்ற சாதனையை படைப்பார். இதனால் நாளை தொடங்க இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விராட் கோலி இந்த சாதனையை படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படிப்பட்ட நிலையில் தான் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரரான கர்ட்லி ஆம்ப்ரோஸ் விராட் கோலி குறித்தது பேசியுள்ளார்.
அவர் கூறுகையில் “நான் விராட் கோலி விளையாடுவதை நான் பல ஆண்டுகளாக பார்த்து வருகிறேன். அவருடைய ஆட்டத்தை நான் எப்போதும் பாராட்டுகிறேன். நிறைய பேர் இறுதி முடிவுகளைப் பார்ப்பார்கள் ஏனென்றால் விராட் அதிக ரன்களை விளாசுவார். அவருடைய இந்த திறமைக்கு பின்னர் கடின உழைப்பு இருக்கிறது. அவர் பேசும் போதெல்லாம், அவர் தனது உடற்பயிற்சி, உணவு மற்றும் அனைத்திலும் மிகவும் சிறந்தவராக இருக்கிறார்.

அவர் அனைத்தும் கலந்த ஒரு கலவையாக நாம் பார்க்கிறோம். அவர் மற்றவர்களைப் போல அதிரடியாக விளையாடும் வீரர் கிடையாது. அவரது இயல்பான விளையாட்டு தற்காப்பு. அதிகமாக சிக்ஸர்களையும் விளாச மாட்டார். ஆனால் அவர் நினைத்தால் அதைச் செய்யும் திறமை அவரிடம் இருக்கிறது. நீங்கள் சிக்ஸ் ஹிட்டர்கள் என்று அழைக்கும் தோழர்களைப் போல விரைவாக ஸ்கோர் செய்ய முடியும். விராட் கோலி ஒரு அற்புதமான வீரர் என்றார் கர்ட்லி ஆம்ப்ரோஸ்.
சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு புதிய மைல்கல்லை படைக்க விராட் கோலிக்கு இனமும் 102 ரன்கள் மட்டுமே தேவை படுகிறது. அப்படி அவர் அந்த ரன்களை எடுக்கும் 13,000 ரன்களை விராட் கடப்பார். இதன் மூலம் 13,000 ரன்களை எடுத்த அவர் சச்சின் டெண்டுல்கர், குமார் சங்கக்கார, ரிக்கி பாண்டிங், சனத் ஜெயசூர்யா போன்றோருடன் இணைவார். இந்நிலையில் இன்று நடக்கும் போட்டியில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஓய்வு எடுக்த நிலையில் அடுத்த போட்டியில் விராட் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




