இந்தியா சந்தித்த மிகச்சிறந்த வீரர்களில் இருவர் விராட் மற்றும் சச்சின் டெண்டுலகர். இதில் சச்சின் டெண்டுல்கர் இன்னமும் யாராலும் முறியடிக்க முடியாத சில அற்புதமான சாதனைகளை படைத்திருக்கிறார். அதே நேராத்தில் விராட் கோலி மெதுவாக சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை முறியடித்து வருகிறார். சமீபத்தில் நடந்த IND vs WI டெஸ்ட் போட்டியில் தான் விராட் கோலி தன்னுடைய 500வது சர்வதேச போட்டியையும் தன்னுடைய 76 சதத்தையும் விளாசினார்.

மேலும் சர்வதேச ஒருநாள் போட்டியில் விராட் கோலி இன்னமும் 102 ரன்களை விளாசினால் சர்வதேச ஒருநாள் போட்டியில் 13,000 ரன்களை குறைவான போட்டிகளில் பெற்ற வீரர் என்ற சாதனையை படைப்பார். இதனால் நாளை தொடங்க இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விராட் கோலி இந்த சாதனையை படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படிப்பட்ட நிலையில் தான் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரரான கர்ட்லி ஆம்ப்ரோஸ் விராட் கோலி குறித்தும் டெண்டுல்கரும் பேசியுள்ளார்.
அவர் கூறுகையில் “நான் சச்சின் டெண்டுல்கரையும், விராட் கோலியயையும் ஒப்பிட்டு பேச விரும்பவில்லை. சச்சின் டெண்டுல்கர் ஒரு சிறந்த வீரர், மேலும் அவர் கிரிக்கெட்டில் அனைத்தையும் சாதித்தவர் ஒருவர். அவருடைய கிரிக்கெட் அறிவையும், அவர் விளையாடிய விதத்தையும் உங்களால் அவரிடம் இருந்து பறிக்க முடியாது. பொதுவாக நான் ஒப்பிட்டு விரும்பும் வகையான ஒரு நபர் கிடையாது என்றார் கர்ட்லி ஆம்ப்ரோஸ்.

நீங்கள் ஒரு சிறந்த வீரராக இருந்து, கடந்த இரண்டு வருடங்களில் விராட் கோலியைப் போல இந்தியாவுக்கு வெளியே சதம் அடிக்காத நிலையில் இருக்கும்போது மக்கள் அவரைப் பார்த்து ‘ஓ, அவர் உச்சத்திற்கு மேல் இருக்கிறார். அவர் போட்டியில் போராடுவதற்கு கரணம் அவர் சதம் அடிக்காததுதான் என்று பல விஷயங்களை கூறுவார்கள். ஆனால் இது நியாயமற்றது. ஒவ்வொரு சிறந்த வீரரும் சதங்கள் அடிக்கத் தவறிய அல்லது சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாத நிலை வரும்.
விராட் கோலி இன்னும் ஒரு தரமான வீரர் தான். அவர் இந்த போட்டியில் சதம் பெற்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இது மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரானது. இருந்த போதிலும் அந்த சதம் அவருடைய நம்பிக்கையை அதிகரித்து வெளியே இவரை விமர்சிக்கும் நபர்களின் வாயை அடைப்பதாக இருக்கும். விராட் கோலி இன்னமும் இந்திய கிரிக்கெட் மற்றும் பொதுவாக கிரிக்கெட்டுக்கு நிறைய பங்களிக்க வேண்டும் என்றார் என்று ஆம்ப்ரோஸ்.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் அதிக ரன்களை விளாசியவர் என்ற சாதனையை படைத்துள்ளார். குறிப்பாக 664 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 48.52 சராசரியை 34357 ரன்களை விளாசியுள்ளார். மேலும் விராட் கோலியும் டெண்டுல்கரும் கடந்த 2011 ஆம் வருடம் நடந்த உலக கோப்பை போட்டியில் இடம்பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடதக்கது.




