மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியாது பல தொடர் போட்டியில் விளையாடி வருகிறது.இடஙக சுற்றுப்பயணத்தில் ஏற்கனவே இந்தியா டெஸ்ட் போட்டியில் 1-0 என்ற கணக்கிலும் ஒருநாள் போட்டியில் 2-1 என்ற கணக்கிலும் வெற்றி பெற்ற நிலையில் இந்திய அணியானது தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் அற்புதமாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது இரண்டாவது போட்டியிலும் வெற்றியை பதிவு செய்தது.

இதனால் இந்த போட்டியில் இந்தியா வெற்றியடைந்தே ஆகவேண்டும் என்று சூழ்நிலையில் யஷஸ்வி மற்றும் சுப்மன் கில் ஆட்டமிழந்த பிறகு பொறுமையாக நின்று விளையாடிய திலக் வர்மா மற்றும் சூரிய குமார் யாதவ் இருவருமே இந்தியா இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்கு முக்கியமான ஒரு காரணமாக இருந்தார்கள். இந்நிலையில் வரலாற்றில் 2 முறை உலக கோப்பையை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியானது 1975 மற்றும் 1979 ஆம் ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக உலகக் கோப்பைக்கு தகுதி பெறாமல் போனது.
எனவே இந்தியா இந்த தொடரில் தோல்வியை தழுவினால் உலக கோப்பையில் இருந்து வெளியேறிய அணிக்கு எதிரான தோல்வியை தழுவியது இந்தியா என்று பலரும் விமர்சிப்பார்கள். இருந்த போதிலும் இந்த சுற்றுப்பயணத்தில் ஜெய்ஸ்வால், திலக் வர்மா போன்ற அறிமுக வீரர்களே வெஸ்ட் இண்டீஸை அடித்து நொறுக்கும் அளவுக்கு மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

அதனால் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற சீனியர்கள் தேவையில்லை என்று கருதும் இந்திய அணி நிர்வாகம் இந்த வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தை ஒரு சோதனையை செய்து பார்க்கும் இடமாக கருதுகிறது. இந்நிலையில் ஜெய்ஸ்வால் போன்ற இளம் வீரர்களுடன் இது போன்ற சாதாரண இருதரப்பு தொடர்களில் வெஸ்ட் இண்டீஸை அடித்து நொறுக்கினாலும் ஐசிசி தொடரில் யார் வெல்கிறார் என்பதை பாருங்கள் என முன்னாள் கேப்டன் டேரன் சமி மறைமுகமாக இந்தியாவை கலாய்த்துள்ளார்.

ஹர்டிக் பாண்டியா, ஜெய்ஸ்வால் போன்ற தரமான வீரர்களை இந்தியா கடந்த பல வருடங்களாக உருவாக்கி வருகிறார்கள். ஆனால் அதே சமயம் நீங்கள் சர்வதேச தொடர்களில் யார் வெல்கிறார்கள் என்பதை பற்றியும் யோசித்துப் பார்க்க வேண்டும். ஏற்கனவே நான் சொன்னது போல் ஜெயிஸ்வால், கில் போன்றவர்கள் வரிசையில் சஞ்சு சாம்சன் போன்ற வாய்ப்பு பெறாதவர்கள் கூட அசத்துபவர்களாக இருக்கின்றனர். அதே போல இளமையாக இருக்கும் ஹர்திக் பாண்டியா இந்திய அணியுடன் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் விளையாடுகிறார்

இது இந்தியாவால் எந்தளவுக்கு இளம் வீரர்களை தொடர்ந்து உருவாக்க முடிகிறது என்பதை காட்டுகிறது. குறிப்பாக முதல் தர கிரிக்கெட்டில் 9 போட்டிகளில் 1800 ரன்கள் அடித்துள்ள ஜெய்ஸ்வால் டாமினிக்காவுக்கு வந்து அறிமுகமாகி சர்வதேச கிரிக்கெட்டுக்கு பொருத்தமானவர் என்பதை நிரூபித்தார். அப்படி சர்வதேச கிரிக்கெட்டுக்கு பொருந்தக்கூடிய வீரர்களை உருவாக்கும் அளவுக்கு இந்தியாவின் முதல் தர போட்டிகளின் அடிப்படை சிறப்பாக இருக்கிறது என்று பாராட்டியுள்ளார் டேரன் சமி.



