அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை போட்டியானது வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக தற்போது ஆசிய கோப்பை போட்டியானது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மூலம் உலக கோப்பை போட்டியில் விளையாடும் ஆசிய அணிக்கு நல்ல ஒரு பயிற்ச்சியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த தொடரில் முதலில் இதே ஆதிக்கம் செழித்தி வந்தது இந்திய அணி.

அதன் காரணமாக இந்தியா முதல் ஆளாக ஆசிய கோப்பை 2023 தொடரின் இறுதி போட்டிக்கு சென்றது. இதனையடுத்து பாகிஸ்தான் அணியை வீழ்த்திய இலங்கை அணி இன்று செப்டம்பர் 17ஆம் தேதி மாபெரும் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தி வருகின்றனர். இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணியானது பந்தவீசுவதாக அறிவித்தது. ஆனால் அது மிகப்பெரிய ஒரு தவறான விஷயம் என்று பின்னர் தான் அவர்களுக்கு தெரியவந்தது.
ஏனென்றால் இந்திய அணியானது 50 ரன்கள் மட்டுமே கொடுத்து இலங்கை அணியை சுலபமாக வீழ்த்தியது. இது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால் இதற்கு முன்னதாக பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணியை வீழ்த்திய இலங்கை அணியை அவர்களது நாட்டில் வீழ்த்தியது இந்தியா. இந்நிலையில் இந்த போட்டிக்கு பிறகு பேசிய இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனாகா தோல்வியடைந்தது குறித்து பேசியிருந்தார்.

இது குறித்து அவர் பேசுகையில் “முகமது சிராஜ் மிகவும் திறமையாக பந்து வீசினார், அது அவருடைய அபார பந்துவீச்சின் திறனை காட்டியது. எங்களுடைய பேட்ஸ்மேன்களுக்கு இந்த மைதானமானது பேட்டிங் செய்ய சரியாக இருக்கும் என்று தோன்றியது. ஆனால் மழை சூழ்நிலையை மாற்றி விளையாடிவிட்டு சென்றது.
அந்த வகையில் எங்களுக்கு இந்த நாள் மிகவும் கடினமான நாளாக அமைந்தது. நாங்கள் எங்களுடைய விளையாடும் டெக்னிக்கை கடினமாக்கி செட்டிலாகி பின்னர் வரும் பேட்ஸ்மேன்களுக்கு எளிதாக விளையாட வாய்ப்பை கொடுத்திருக்க வேண்டும். இதில் எங்களுக்கு பல நல்ல பாடங்கள் கிடைத்தன. குறிப்பாக சமரவிக்ரமா, அசலங்க, குசால் ஆகியோர் இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பையில் சுழலுக்கு எதிராக அதிக ரன்கள் அடிப்பார்கள்.
இது போன்ற கடினமான சூழ்நிலைகளிலிருந்து எப்படி திரும்பி வருவது என எங்களுக்கு தெரியும். இந்த தொடரில் நாங்கள் நல்ல அணிகளை தோற்கடித்து ஃபைனலுக்கு வந்தோம். கடந்த சில வருடங்களாக நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடுகிறோம். எங்களுக்கு ஆதரவு தெரிவித்த ரசிகர்களுக்கு நன்றியையும் அதே சமயம் ஏமாற்றியதற்கு மன்னிப்பையும் கேட்டுக்கொள்கிறேன். மேலும் இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் என்று கூறினார் இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனாகா.




