உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர் பார்த்து கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்பொழுது இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் லீக் போட்டிகள் கிட்ட தட்ட நிறைவடைந்த நிலையில் இந்திய அணி முதல் இடத்தில் அரை இறுதி சுற்றுக்கு தகுதி வாய்ந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக தென்னாப்பிரிக்கா அணி இரண்டாம் இடத்தில் அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்திய அணி இது வரை நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் வெற்றி கண்டுள்ளது.

இந்திய அணி முதலில் மாபெரும் அணியாக கருதப்பட்ட ஆஸ்திரேலியா அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன் பின்னராக விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி எட்டு விக்கெட் வித்தியாசத்திலும் பாகிஸ்தான அணியை ஏழு விக்கெட் வித்தியாசத்திலும் பங்களாதேஷ் அணியும் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்தின் 4 விக்கெட் வித்தியாசத்திளும் இங்கிலாந்து அணியை 100 ரன்கள் வித்தியாசத்திலும்,

இலங்கை அணியை 302 ரன்கள் வித்தியாசத்திலும் இந்த உலக கோப்பையில் இந்தியாவிற்கு சமமாக கருதப்பட்ட தென்னாப்பிரிக்கா அணியை 243 வித்தியாசத்திலும் மாபெரும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்து வருகிறது. இந்தியாவின் கடந்த போட்டியில் தென்னாபிரிக்க அணி தோல்வியைத் தழுவி இருந்தாலும் அது புள்ளி பட்டியலில் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இது குறித்து கூறிய முன்னாள் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் முகமது யூசுப் கூறுகையில்,
இந்திய தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கும் இடையே நடைபெறும் போட்டிக்கும் முன்பாக இரு அணிகளும் சம பலமாக இருப்பது போல தெரிந்தது. ஆனால் போட்டிக்கு பிறகு இந்தியா அணியாக மட்டுமே இருந்தது. இந்திய அணி பேவரைட் ஆக இருக்கின்றது. அதற்கு காரணம் அவர்களிடம் சிறந்த தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களும் பேட்ஸ்மேன்களும் இருக்கின்றார்கள். அது மட்டுமல்லாமல் அவர்கள் ஒரு யூனிட்டாக குழுவாக விளையாடுகிறார்கள். இந்திய அணி நடப்பு உலகக்கோப்பை தொடரில் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இதில் அவர்களுடைய முயற்சிக்கும் கடின உழைப்புக்கும் ராகுல் டிராவிட்டும் ஒரு பங்களிப்பு வழங்குகிறார் என்பதை மறக்க முடியாது. ராகுல் டிராவிட் அணியை ஒருங்கிணைத்து சரியான திட்டமிட்டு கொண்டு வருகிறார் ராகுல் டிராவிட் மற்றும் ரோஹித் சர்மா இருவருக்கும் சரியான கெமிஸ்ட்ரி கொண்டிருக்கிறார்கள். இந்த உலக கோப்பையில் இந்திய அணி தோல்வியை தரும் என்று நான் நினைக்கவில்லை அவர்கள் தோல்வி அடைய வேண்டும் என்று நினைத்தால் அது துர்தவஷ்டமாக இருக்கும் அவர்கள் அனைத்து பெட்டிகளையும் டிக் செய்து கொண்டு உள்ளார்கள் இந்திய அணியில் அந்த வித பலவீனமும் இல்லை என்றும் அவர் கூறியிருந்தார்.



