ஆசிய கிரிக்கெட்டின் பரம எதிரிகளாக திகழும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கடந்த 10 வருடங்களாக எல்லை பிரச்சினை காரணமாக இருதரப்பு தொடர்களில் மோதுவதை தவிர்த்து விட்டு ஆசிய மற்றும் ஐசிசி உலகக் கோப்பைகளில் மட்டுமே விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் இந்தியா கலந்து கொள்வது குறித்து கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பிரச்சனை வந்த நிலையில் வேறு வழியின்றி அந்த அணி பங்கேற்கும் போட்டிகளை அந்நாட்டில் நடத்துவதற்கு ஆசிய கவுன்சில் அனுமதி கொடுத்துள்ளது.

இந்நிலையில் தான் நேற்று இந்த போட்டிகளுக்கான அட்டவணை வெளியாகியிருந்தது. கடந்த 1992 முதல் 50 ஓவர் உலகக் கோப்பையில் இதுவரை சந்தித்த 7 போட்டிகளிலும் பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா இந்த முறையும் 2023 உலகக்கோப்பையிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் 2017 சாம்பியன்ஸ் டிராபியில் சவாலான இங்கிலாந்தில் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற மாபெரும் இறுதிப் போட்டியில் இந்தியாவை தோற்கடித்து கோப்பையை வென்ற பாகிஸ்தான் 2021 டி20 உலகக் கோப்பையில் முதல் முறையாக சரித்திர வெற்றி பெற்றது.
மேலும் 2022 ஆசிய கோப்பையிலும் லீக் சுற்றில் தோல்வியை பரிசளித்த நடப்பு சாம்பியன் இந்தியாவை முக்கியமான சூப்பர் 4 சுற்றில் பாஸ்கிதான் இந்தியாவை தோற்கடித்தது. இப்படிப்பட்ட நிலையில் தான் வரும் ஆசிய கோப்பைக்கு முனதா இந்தியாவின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆசிய கோப்பைக்கான தங்களுடைய திட்டம் என்ன என்பது குறித்து பிசிசிஐ வெளியிட்ட வீடியோ ஒன்றில் பேசியுள்ளார்.
🎥 With the #AsiaCup2023 fixtures announced, here's what #TeamIndia Head Coach Rahul Dravid said 🔽 pic.twitter.com/ycEWukD5zW
— BCCI (@BCCI) July 19, 2023
ராகுல் டிராவிட் கூறியது :
அவர் கூறுகையில் “போட்டிகளுக்கான அட்டவணை வெளியாகி விட்டது. பாக்கிஸ்தானை மூன்று முறை இந்த போட்டியில் எதிர்கொள்ள சூப்பர் ஃபோர்ஸுக்கு தகுதி பெற வேண்டும். ஒவ்வொரு படியாக முன்னேறுவோம். இரண்டு ஆட்டங்களில் நாங்கள் பாகிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகளுடன் விளையாட போகிறோம் என்று எனக்குத் தெரியும். எனவே நாம் அதில் கவனம் செலுத்த வேண்டும்.
நாம் அந்த விளையாட்டுகளை வென்று போட்டி எங்கு செல்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். நாங்கள் வென்று பாகிஸ்தான் அணியுடன் மூன்று முறை விளையாட எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் அது அருமை. மேலும் அது நடந்தால் நாங்கள் இந்த தொடரின் இறுதி போட்டியை அடைவோம் என்று அர்த்தம. பாகிஸ்தானும் அவ்வாறே வரும் என்று நம்புகிறோம்.
இந்த போட்டியானது கண்டிப்பாக இரு அருமையான விளையாட்டாக இருக்கும். எங்களுடைய முழு கவனமும் இறுதி போட்டியில் வென்று கோப்பையை அடைவதுதான். ஆனால் அங்கு செல்ல இரண்டு படிகளை தாண்ட வேண்டும் என்றார் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்.



